அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Latest News K Annamalai Biopic : பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 3, 2024, 10:27 AM IST
  • அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
  • ஐ.எபி.எஸ் ஆக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்
  • ஹீரோவாக நடிப்பது யார்?
அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?  title=

Latest News K Annamalai Biopic : சமீப சில நாட்களாக, தமிழ் சினிமாவில் ஜாம்வான் நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்பு, ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை, அருண் மாத்தேஸ்வரன் இயக்க, இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இதை தொடர்ந்து, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு:

தமிழக மக்களிடையே மிகவும் முகம் தெரிந்த அரசியல்வாதியாக இருப்பவர், அண்ணாமலை. தினமும் தொலைக்காட்சியை ஆன் செய்தாலே இவர் குறித்து குறைந்தது 5 செய்தியாவது ஒரு நாளில் வந்து விடும். அந்த அளவிற்கு தன்னை பற்றி பிறர் ஏதாவது பேச வேண்டும் என்ற வகையில், ஏதேனும் விஷயங்களை செய்து கொண்டே இருப்பார். இவர் குறித்து பலர் பேச இன்னொரு காரணம், இவர் ஐபிஎஸ் படித்து விட்டு, காவல் அதிகாரியாக இருந்து பின்னர் அந்த பணியை துறந்து பாஜக கட்சியில் இணைந்தார் என்பதுதான். கரூரில் பிறந்து கோயம்புத்தூரில் படித்து வளர்ந்த இவர், தற்போது இந்தியா முழுவதும் பிரபலமடைவதற்கான காரணம், இவரது பேச்சு திறமைதான். 

மேலும் படிக்க | ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?

39 வயதாகும் அண்ணாமலை, தற்போது இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இவரை மீம் போட்டு கலாய்த்து கொண்டிருந்தவர்கள், நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதை ஒட்டி இவருக்கு ஆதரவாக பாேஸ்ட் போடுகின்றனர். அந்த அளவிற்கு, இவர் தற்போது பிரபலமடைந்திருக்கிறார். எப்போதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கும் இவர், தற்போது மீண்டும் ஒரு விஷயத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் வாழ்க்கை வரலாறு படமாவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

Vishal

ஹீரோவாக நடிப்பது யார்..?

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக, விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஒரு பிரபல இயக்குநர் இயக்க உள்ளதாகவும், இதில் அண்ணாமலை படித்த காலத்தில் இருந்து, அவர் ஐபிஎஸ் ஆனது எப்படி என்றும், 9 வருட காவல் அதிகாரி அனுபவத்திற்கு பிறகு அரசியலில் நுழைந்தது ஏன் என்பது போன்ற விஷயங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தன்னை குறித்து இணையத்தில் என்ன பேசினாலும், முதலில் வந்து அது குறித்து விளக்கம் கொடுக்கும் விஷால், இந்த விஷயம் குறித்து எதுவும் வாய் திறவாமல் இருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அண்ணாமலையின் வயது, 39தான், ஆனால் நடிகர் விஷாலுக்கு வயது தற்போது 46 ஆகிறது. இவர் அண்ணாமலையாக நடித்தால், அது ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்க | சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News