விடுதலை 2 படத்தில் அரசியல் அமசங்கள் உள்ளது! நடிகர் சூரி பரபரப்பு பேச்சு..
Soori Talks About Viduthalai Part 2 Movie : விடுதலை - 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார்.
Soori Talks About Viduthalai Part 2 Movie : விடுதலை - 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சூரி.
சூரி பேச்சு:
விடுதலை - 1 படத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அந்தப் படத்தை கொண்டாடினர் அதேபோல விடுதலை - 2 ஐயும் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
விடுதலை 2 படத்தில் கமர்சியலை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது. விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும்.
சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை -2 படத்தை பாருங்கள். இந்த படத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை-3 எடுப்பது குறித்து பார்ப்போம்.
அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை-2ல் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன்.
விடுதலை 2 படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளிவருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும். நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். யார் அதில் ஹீரோ என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான்.
அரசியலுக்கு வருவீர்களா என்கிற கேள்விக்கு, இதுவே (திரைத்துறையே) நன்றாக தான் இருக்கிறது. இதிலே பயணிப்போம் என்றார். அடுத்து மாமன் என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறேன் அந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தான் நடந்து வருகிறது என தெரிவித்தார்.
அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வெற்றிமாறன்!
நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதற்கு இந்திய அளவில் பெரிய எதிர்ப்பு கிளம்பினாலும், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் அமித்ஷாவிற்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கமல்ஹாசன், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், விடுதலை பாகம் 2 படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும் அமித்ஷாவின் பேச்சு கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார். முதல் காட்சி படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் அமித்ஷாவின் பேச்சு குறித்து கேள்வி கேட்ட போது அவர் இதை கூறினார்.
மேலும் படிக்க | ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ