Viduthalai 2 X Review Tamil : இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருக்கிறது விடுதலை பாகம் 2 திரைப்படம். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை சமூகப் வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
விமர்சனம்:
புதிதாக ரிலீஸான படங்களை பார்ப்பவர்கள் அதை பார்த்தவுடன் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுண்டு. அப்படி, விடுதலை பாகம் 2 திரைப்படத்தை பார்த்த பலரும் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் எக்ஸ் தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். அவற்றை இங்கு பார்ப்போம்.
ஓவர் புரட்சி!
விடுதலை 2 படத்தை முதல் காட்சியில் பார்த்த ரசிகர் ஒருவர் அதன் விமர்சனத்தை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், படத்தில் ஓவர் புரட்சி இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
First Half -
Initial 30 Mins Terrific. VJS show all the way. Dialogues & Actions Pakka. Too much of Puratchi, But Engaging!#ViduthalaiPart2
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 20, 2024
மேலும், முதல் 30 நிமிட படம் பயங்கரமாக இருந்ததாகவும், வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் பக்காவாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
படத்தை முழுதாக பார்த்த அந்த ரசிகர், இது வெற்றி மாறனின் சம்பவம் என குறிப்பிட்டிருக்கிறார்.
Thozhar “VETRI”maaran Sambhavam #ViduthalaiPart2 - WORTHU!
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 20, 2024
திரைக்கதை..
விடுதலை 2 திரைப்படத்தின் திரைக்கதை பக்காவாக இருப்பதாக ஒரு ரசிகர் பதிவிட்டு இருக்கிறார்.
Viduthalai part 2 with the banger screenplay political satire movie positive reviews for Vetri - VJS - Soori combo #ViduthalaiPart2 #VijaySethupathi #vetrimaran #Soori #ViduthalaiPart2Review #Review #MufasaTheLionKing pic.twitter.com/pJKeuxEtKW
— (@Deepak32763716) December 20, 2024
வெற்றிமாறனின் சம்பவம்!
#ViduthalaiPart2 - Into 25 mins & VetriMaaran Sambavam has started with a hard hitting sequence
The raise of Vaathiyaar#VijaySethupathi pic.twitter.com/NAjpYspLTh
— karthik (@karthik_00ff) December 20, 2024
படத்தில் முதல் 25 நிமிட காட்சிகள் பயங்கரமாக இருப்பதாக ஒரு ரசிகர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
வெற்றிமாறனுக்கு பாசிடிவான விமர்சனங்கள் வருவதாகவும், விஜய் சேதுபதி-சூரியின் காம்போ நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒருவர் இந்த படத்தை பார்த்து எனக்கு வார்த்தையே வரவில்லை என்று கூறியிருக்கிறார்.
Vetri Maran What a craft. I'm speechless, this is not just a filmthat's what I want to say. Everyone should watch it. Every dialogue is powerful. Everyone lived in their character. @VijaySethuOffl Special mention @ilaiyaraaja god of Music #Viduthalai2 #ViduthalaiPart2 pic.twitter.com/kjl700YUOf
— (@DiCaprio_VJ) December 20, 2024
மேலும், இதில் நடித்துள்ளவர்கள் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக சிலர் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க | அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!
மேலும் படிக்க | Meiyazhagan Review : மெய்யழகன் படம் எப்படி? சுமாரா? சூப்பரா? திரை விமர்சனம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ