சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிக அளவில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிப்பதைக் காண முடிகின்றது. பல பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றனர்.


இதற்கிடையில், நடிகர் சூர்யாவும் (Actor Suriya) நடிகை ஜோதிகாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 


கொரோனாவுக்கு (Coronavirus)எதிரான மாபெரும் ஆயுதமாக கொரோனா தடுப்பூசி பார்க்கப்படுகின்றது. முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து மக்களிடையே சிறிய அச்சம் இருந்தபோதிலும், தற்போது, மெல்ல மெல்ல மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்றியமையாதது என்பதை புரிந்துகொண்டு வருகின்றனர். தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ALSO READ: NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா


இந்த நிலையில், சினிமா நடிகர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதும் மக்கள் மனங்களில் பெரிய அளவிலான ஊக்குவிப்பையும் நம்பிக்கையையும் அதிகரிக்கின்றது. பிரபலங்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அதன் புகைப்படங்களையும் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


அந்த வகையில் இன்று நடிகர் சூர்யாவும், அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccination) செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைபடங்களையும் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



நடிகர் சூர்யாவின் சகோதரரான நடிகர் கார்த்தியும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டு தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ALSO READ: Karthi gets COVID vaccination: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR