தாறுமாறான வசனங்களுடன் வெளியானது சூர்யாவின் சூரரைப்போற்று trailer..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியீடு..!

Last Updated : Oct 26, 2020, 01:10 PM IST
தாறுமாறான வசனங்களுடன் வெளியானது சூர்யாவின் சூரரைப்போற்று trailer..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியீடு..!

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் பூட்டபட்டுள்ளாதால் தற்போது எடுக்கபட்டுள்ள திரைபடங்கள் அனைத்தும் OTT தளங்களில் வெளியீட்டு வருகின்றனர். அந்த அவரிசையில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் ஆகிய இரு படங்களும் இந்த தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "சூரரைப் போற்று" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ | வெளியானது ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்

இந்த படத்திற்கு GV.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது.

ஆனால், இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழை பெற்றிருக்கும் படக்குழு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 12 ஆம் தேதியன்று சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த திரைப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளது.

More Stories

Trending News