NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா

தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 19, 2021, 04:23 PM IST
  • அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஒன்றே ஆயுதமாக உள்ளது- நடிகர் சூர்யா
  • கல்வி மாநில உரிமையாக்கப்பட வேண்டும் - சூர்யா.
  • தமிழக அரசின் நீட் குழுவிடம் மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கோரிக்கை விடுக்க வேண்டும்-சூர்யா.
NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா  title=

TN NEET Update: தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்திய அளவிலான இந்த நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களுக்கும் நடத்தப்பட வெண்டும் என்றும், மாணவர்களுக்கான திறன் அதற்கேற்றபடி இல்லையென்றால், திறமையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். 

எனினும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நாடு முழுவதும் நடத்தப்படும் இப்படிப்பட்ட நுழைவுத் தேர்வுகள் அநீதியை இழப்பதாக மற்றொரு சாரார் கூறுகிறார்கள். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடக்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது. 

இந்த நிலையில், நீட் தேர்வால் (NEET Exam) ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய, தமிழக அரசு நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இது குறித்த கருத்துகளை பொது மக்கள் தெரிவிக்க,  neetimpact2021@gmail.com என்ற மின் அஞ்சலும் வழங்கப்படுள்ளது. 

ALSO READ: NEET தேர்வு குறித்த கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

சமூக நலன் தொடர்பான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வரும் நடிகர் சூர்யா (Actor Suriya), தற்போது நீட் தேர்வுகள் குறித்த தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு அமைத்துள்ள நீட் குழுவிடம் மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கோரிக்கை விடுக்க வேண்டும் என சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழகத்தைப் (Tamil Nadu) பொறுத்தவரை, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஒன்றே ஆயுதமாக உள்ளது. நமது சமூகத்தில் ஏழைகளுக்கு ஒரு வகையான கல்வி முறையும் பணக்காரர்களுக்கு ஒரு வகையான கல்வி முறையும் உள்ளது.  அப்படி இருக்கையில் தேர்வு முறை மட்டும் எப்படி ஒரே போல் இருக்க மூடியும்? இது எப்படி சரியான நீதியாக முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

பல மொழிகள், வாழ்க்கை முறைகள் என இருக்கும் இந்தியாவில் கல்வி மாநில உரிமையாக மாற்றப்பட வேண்டும் என நடிகர் சூர்யா கூறியுள்ளார். மாணவர்களின் நலனுக்கு நீட் போன்ற தேர்வுகள் ஆபத்தானவை என்றும் அவர் எச்சரித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுடன் தனது தொண்டு நிறுவனமான அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து பயணிக்கிறது என்றும், நீட் குறித்து அகரம் ஃபவுண்டேஷன் நீதிபதி ஏ.கே. ராஜனிடம் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

ALSO READ: TN NEET update: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News