தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டிருக்கும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் சூர்யா.  சூர்யா நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் சமூக கருத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைவதுடன், படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.  மேலும் இவர் சில படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்தும் வருகிறார், அதிலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  தற்போது சூர்யா, பாலா இயக்கும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார், இதனை தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும், இன்னும் சில தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மனிதர்கள் இல்லை.. அனிமேஷன் காட்சிகள் இல்லை.. பார்த்திபனின் அடுத்த புது முயற்சி?


 


கடந்த சில வருடங்களாகவே சூர்யாவிற்கு தெலுங்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கதவை தட்டிக்கொண்டே இருக்கின்றது, ஆனால் சில காரணங்களால் அவரால் அந்த படங்களின் பணிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.  பல பிரபலமான இயக்குனர்கள் நல்ல ஸ்க்ரிப்டுடன் சூர்யாவை அணுகி வருகின்றனர்.  இதுகுறித்து வெளியாகியுள்ள கூடுதல் தகவல்களின்படி, போயாபதி ஸ்ரீனி இயக்கத்தில் சூர்யா புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், இந்த சந்திப்பை தில் ராஜு ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.  ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



மேலும் நடிகர் சூர்யா தற்போது நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  யூவி கிரியேஷன்ஸ் சார்பில் இரண்டு மொழிகளில் தயாரிக்கும் இந்த படத்தை சௌர்யம்  ஷிவா இயக்குகிறார்.  இப்படத்திற்கான கதையை இயக்குனர் ஷிவா, சூர்யாவிடம் கூற அதற்கு நடிகரும் ஒப்புதல் தெரிவித்துவிட்டாராம்.  மேலும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோரும் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது, விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | விஜய் சேதுபதி இடம் இனி சமந்தாவுக்கு... விஜய் படத்தில் இப்படி ஒரு ரோலா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ