விஜய் சேதுபதி இடம் இனி சமந்தாவுக்கு... விஜய் படத்தில் இப்படி ஒரு ரோலா?

லோகேஷ் கனகராஜ் - விஜய் இணையும் படத்தில் சமந்தா நெகட்டிவ் ரோலில் நடிக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 18, 2022, 04:28 PM IST
  • விஜய் நடித்த பீஸ்ட் படம் தோல்வியடைந்தது
  • தற்போது அவர் வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார்
  • படத்துக்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது
விஜய் சேதுபதி இடம் இனி சமந்தாவுக்கு... விஜய் படத்தில் இப்படி ஒரு ரோலா? title=

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் தோல்வியடைந்ததை அடுத்து அவர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்பத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்துக்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. பீஸ்ட்டில் விட்டதை இப்படத்தில் விஜய் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Varisu

இந்தப் படத்துக்கு அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் விஜய். விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்ததன் மூலம் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியிருக்கிறார் லோகேஷ். எனவே அவர் விஜய்யுடன் அடுத்ததாக இணையும் படம் எந்த ஜானரில் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

 

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் படம் ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் அடுத்ததாக இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

 

இந்நிலையில் விஜய்யும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணையவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகி சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | இதற்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் - பவி டீச்சர் ஓபன் டாக்

விஜய் சேதுபதிதான் பொதுவாக வில்லன் ரோல் செய்துவரும் சூழலில் தற்போது லோகேஷ் படத்தில் சமந்தா வில்லி என வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்திற்கு நோட்டீஸ்: வரலாற்று உண்மைகளை மறைத்தாரா இயக்குனர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News