கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தனர். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அப்பொழுது நடிகர் கார்த்தியுடன் அதிதி சங்கர் கபடி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்த்ல் வைரலாகியுள்ளன.



விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “விருமன் படத்திற்காக கேமராவுக்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எந்த வெற்றியும் தனி வெற்றியாகாது. குடும்பங்களும் அதற்கு ஒரு முக்கிய காரணம். எங்களை மேலே உயர்த்திவிட எங்களுக்கு பின்னால் ஒரு பலம் உள்ளது. அவர்கள் எங்கள் வீட்டிலிருக்கும் பெண்கள்தான்.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்... வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?


அவர்களின் தியாகங்கள் அதில் அடங்கியுள்ளன. ஆண்கள் வெற்றி பெறுவது சுலபம், ஆனால் பெண்கள் 10 மடங்கு கஷ்டப்பட்டால்தான் அந்த பெயர் கிடைக்கும். அவர்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளனர். தியாகம் என்பதற்கு நிறைய வார்த்தைகள் உள்ளன. இங்கு எல்லாரையும் அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என நினைத்தோம் பெண்களை முன் வைத்து வாழ்க்கையை பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகாக தெரியும்” என்றார்.


மேலும் படிக்க | என்னது சரக்கா... ஆளை விடுங்க சாமி - முடிவெடுத்த சிம்பு கொண்டாடும் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ