சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி (OTT) தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இவர் இறுதி சுற்று என்னும் வெற்றிப் பட இயக்குநர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் டெக்கான் (Air Deccan) நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்ட இந்த படம் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்படவிருந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் சூர்யா இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.


அவர் எழுதிய ஒரு கடிதத்தில், "படத்தின் வெளியீட்டிற்கான இப்போது எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று எழுதியுள்ளர்.  சில ஒப்புதல்கள் (NOC ) பெற தாமதம் ஆவதே இதற்கு காரணம் என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


"சில ஒப்புதல்கள் பெறுவது நிலுவையில் உள்ளது, இந்த நெருக்கடியான நேரத்தில்,  தேசம் நலன் மற்றும் அதன் முன்னுரிமைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், ஒப்புதல் பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது." என்று எழுதிய கடிதத்துடன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ஆகாசம் என்ற படத்தின் ஒரு பாடலின் இணைப்பையும் நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டார்.


அக்டோபர் 30ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது வரை படத்தின் விளம்பர   பணிகள் கூட தொடங்கவில்லை. இதனால், இதன் வெளியீடு தாமதமாகலாம் என சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் அக்டோபர் 21 அன்று வெளியிட்ட இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் 'சூரரைப் போற்று' படத்தின் பெயர் இடம்பெறவில்லை.


இது தொடர்பாக விசாரித்தபோது, '' 'சூரரைப் போற்று' படத்துக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கடிதம் வர வேண்டியதுள்ளது. அது வந்தால் மட்டுமே விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது.


இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத், வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம்  தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்திய விமானப் படை தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைப்பதற்காக படக்குழு காத்திருக்கிறது.


இந்திய விமானப் படை ஒப்புதல் கடிதம் கிடைத்த பிறகு தான் புதிய வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.


ALSO READ | வாரத்தில் 2 நாள் Netflix இலவசமாக பார்க்கலாம்! இந்த சலுகையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR