வாரத்தில் 2 நாள் Netflix இலவசமாக பார்க்கலாம்! இந்த சலுகையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களிடம் நெட்ஃபிக்ஸ் இல்லையென்றால், இரண்டு நாட்கள் இலவசமாக நெட்ஃபிக்ஸ் இல் தொடர் அல்லது திரைப்படங்களைப் (TV shows and Movies) பார்க்கலாம்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 21, 2020, 05:56 PM IST
  • StreamFest திட்டத்தின் கீழ் 48 மணி நேர சேவையை இலவசமாக வழங்க Netflix நிறுவனம் முடிவு.
  • இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும், இந்த சலுகை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கும்.
  • கிரெடிட் கார்டு அல்லது எந்தவொரு அட்டையும் பயன்படுத்தி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வாரத்தில் 2 நாள் Netflix இலவசமாக பார்க்கலாம்! இந்த சலுகையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Free Netflix for two days: உங்களிடம் ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃபிக்ஸ் சந்தா இல்லை என்றால், அந்த நிறுவனம் இலவச சந்தாவை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே. StreamFest கீழ் இந்த 48 மணி நேர தனது சேவையை இலவசமாக வழங்க (Free Netflix) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. உங்களிடம் நெட்ஃபிக்ஸ் இல்லையென்றால், இரண்டு நாட்கள் இலவசமாக நெட்ஃபிக்ஸ் இல் தொடர் அல்லது திரைப்படங்களைப் (TV shows and Movies) பார்க்கலாம்.

இந்த சலுகை தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு (Netflix in India) மட்டும் வழங்கப்படுகிறது. இது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த விளம்பர சலுகை ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் (StreamFest) என்று அழைக்கப்படும்.

ALSO READ |  பணத்தை செலவழிக்காமல் நீங்கள் Netflix-ல் படம் பார்க்கலாம்!! எப்படி என்று தெரியுமா?

ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் சலுகையின் நல்ல விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் கிரெடிட் கார்டு அல்லது எந்தவொரு அட்டையும் பயன்படுத்தி கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

நெட்ஃபிக்ஸ் முதலில் ஒரு மாத சேவையை இலவசமாக வழங்கியது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் சமீபத்தில் நிறுவனம் இந்த சலுகையை ரத்து செய்துள்ளது.

முன்னதாக, 1 மாத இலவச சேவை பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டண விவரங்களை நிரப்ப வேண்டியிருந்தது, இலவச சேவை முடிந்ததும், நிறுவனம் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து கட்டணத்தை பிடித்தம் செய்தார்கள். 

நெட்ஃபிக்ஸ் சி.ஓ.ஓ கிரெக் பீட்டர்ஸ் (Netflix COO Greg Peters) ஒரு நேர்காணலில் இந்த யோசனை குறித்து, இது புதுமையான முயற்சியாக இருப்பதாகவும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ |  ஹாப்பி நியூஸ்.....OTT மேடையில் வரவிருக்கும் இந்த 5 சூப்பர் ஹிட் தென்னிந்திய திரைப்படங்கள்

ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வார இறுதியில் நெட்ஃபிக்ஸ் சேவை இலவசமாக வழங்கப்பட்டால், அது அதிகமான மக்களை சென்றடையும். அதன்மூலம் எங்களது சேவை மற்றும் அதன் பயன்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ள உதவும். என்று அவர் கூறியுள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News