நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நேற்று காலை உயிரிழந்த்தை அடுத்து, தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. விஜயகாந்தின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நடிகர் விஜய்யும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேற்று இரவு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜயகாந்திற்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி..


விஜயகாந்தின் உடல், நேற்று கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. காலையில் இருந்தே திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு 10:40 மணியளவில், நடிகர் விஜய் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அவர் வந்த போது, அவரை கூட்டம் சூழ்ந்து கொண்டது. சாலையில் இருந்து விஜயகாந்த்தின் உடல் இருக்கும் இடத்திற்கு நடந்து வருவதற்குள் அவரை பலர் சூழ்ந்து கொண்டனர். 


மேலும் படிக்க | மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்


விஜய்யை தாக்கிய மர்ம நபர்கள்? 


நடிகர் விஜய் விஜயகாந்தின் உடல் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது, அவரை சுற்றி பாதுகாப்பிற்காக பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்து விஜய் இருந்த இடத்தை நோக்கி செருப்பு பறந்து வந்ததது. அது மட்டுமன்றி, ஒரு கூட்டத்தில் இருந்த ஒரு சிலர், விஜய்யை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவை எடிட் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது. 


கலங்கி நின்ற விஜய்..


நடிகர் விஜய், விஜயகாந்தின் உடலருகே வந்து கலங்கி நின்றார். அவரது உடல் இருக்கும் பெட்டி மீது கை வைத்து, விஜயகாந்தின் உடலை பார்த்தபடி சில விநாடிகள் நின்றார். பின்னர், பிரேமலதா விஜயகாந்திடம் கலங்கியவாறு பேசினார். சில நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து கிளம்புவதற்காக திரும்பியவர், மீண்டும் விஜயகாந்தின் உடலை சில விநாடிகள் திரும்பி பார்த்தார். இது குறித்த வீடியாேக்கள் இணையம் பரவி கிடக்கின்றன. 


விஜய்-விஜயகாந்த் பந்தம்..


விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் அவரை எந்த பிரபல இயக்குநர்களும் அவரை நடிக்க வைக்க தயாராக இல்லை. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கிய படங்களில் விஜயகாந்தை நடிக்க வைத்தார். விஜய்யின் முதல் படமான‘வெற்றி’படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து விஜய்யின்‘நாளைய தீர்ப்பு’ படத்தில் விஜயகாந்த் கௌரவ தோற்றத்தில் வந்திருப்பார். இதையடுத்து ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜய்யும் விஜயகாந்தும் அண்ணன்-தம்பியாக நடித்திருந்தனர். இந்த படம், ஹிட் அடித்து, விஜய்க்கு பெரிய சினிமா வாழ்க்கையை கொடுத்தது. இப்படி, விஜய்யின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த நபர்களுள் விஜயகாந்தும் ஒருவர். சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்ற ‘லியாே’ வெற்றி விழாவில் நல்ல நடிகர்களின் பெயர்களை கூறிய விஜய், முதலில் விஜயகாந்தின் பெயரைத்தான் கூறினார். இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல், இன்று மாலை 4:40 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக அலுவலக வலாகத்தில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது. 


மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியலுக்கு வருவார்... ரஜினி வர மாட்டார்... ஜோசியர் சொல்லியதை நினைவுகூர்ந்த நடிகர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ