தளபதி விஜய் எவ்வளவு பிரபலமானவர், அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் பட்டாளமும், பெயரும், புகழும் உள்ளது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான்.  அவரை பல கதாநாயகிகளுக்கும் பிடிக்கும், அதிலும் குறிப்பாக நடிகை மாளவிகா மோகனனுக்கு விஜயை எந்த அளவிற்கு பிடிக்கும் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்.  தற்போது மீண்டும் விஜயை தான் எந்த அளவில் உயரத்தில் வைத்திருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.  இவர் தமிழில் முதன்முதலாக 2019ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தனுஷூடனானா படுக்கையறை காட்சி குறித்த கேட்ட நெட்டிசன் - விளாசிய மாளவிகா


அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.  ஆரம்பத்திலேயே இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் பணியாற்றிவிட்ட பெருமையை இவர் அடைந்தார்.  மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் அதிகளவில் பிரபலமடைந்து வருகிறார், இவரது புகைப்படங்கள் பெரும்பாலும் வைரலாகி வருகின்றன.  சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவரிடம் ரசிகர்கள் பலவித கேள்விகளை கேட்டு வருவார்கள்.


அந்த வகையில் ரசிகர் ஒரு தளபதி விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார்.    'நான் தளபதி விஜயை பற்றி பலமுறை பல இடங்களில் பேசி இருக்கிறேன், அவர் எனக்கு எவ்வளவு பிடித்தமானவர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று.  இப்போது அதுபற்றி தெரியாதவர்களுக்காக நான் இதை கூறுகிறேன், தளபதி விஜய் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் ஆன ஒருவர், நான் யாருடன் பணியாற்றினாலும், எங்கு இருந்தாலும் சரி எப்போதும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | திரை விமர்சனம்: நெஞ்சுக்கு நீதி - சமூக நீதி பேசும் தரமான சினிமா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR