கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடிகர் விஜய் தனது புதிய கட்சியை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலையும் பெரும் பேசு பொருளானது. பல முக்கிய தலைவர்களும் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும் தமிழக அரசியல்வாதிகள் சிலர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் மக்களின் மனதை வெல்வதை முக்கியம் என்றும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!


இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்றும் பேசப்பட்டு வந்தது. இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தார், கடைசியில் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.  ஆனால் தற்போது விஷால் அவர் வெளியிட்ட அறிக்கையில் தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், தொடர்ந்து மக்கள் சேவையை மட்டும் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம். அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.


அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | கடைசி படத்திற்கு தளபதி விஜய் வாங்கப்போகும் சம்பளம் இவ்வளவு கோடிகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ