டெல்லியில் நேற்று (22.7.22) அறிவிக்கப்பட்ட 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் 5 விருதுகளை அள்ளியிருக்கிறது. இதுபோக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் 3, மண்டேலா 2 என மொத்தம் தமிழுக்கு மட்டும் 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற அபர்ணா பாலமுரளி அவரது திரைப்பயணம் குறித்து கூறுகையில், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஜய் டிவி பிரபலத்தை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் இசைப்புயல்! நடிகையின் ரியாக்ஷன்


“என் சினிமா பயணம் வீணாகிவிடுமோ என பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. தேசிய விருது அறிவிப்பை அறிந்து திக்குமுக்காடியிருக்கிறேன். 'சூரரைப் போற்று' படத்தின் இயக்குநருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். சுதா கொங்கரா எனக்கு பின்னால் உறுதியாக நின்றார். இந்தப் படம் வெளியாகும்போது, கரோனா காலமாக இருந்ததால் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்குள் இருந்தது.



ஆனால் இப்போது நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். எனது சினிமா பிரவேசம் எதிர்பாராதது. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரத்தைப் போல நிறைய நல்ல படங்களில் தரமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அனைவருக்கும் மிக்க நன்றி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இந்த உலகத்தில் இல்லை.


மேலும் படிக்க | வாடிவாசல் - மாடு பிடிக்க சூர்யா கற்றுக்கொண்ட நுட்பங்கள் என்ன தெரியுமா?


நான் இந்தத் துறையில் நுழைந்தபோது எனக்கு எதுவும் தெரியாது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். காலை வீட்டை விட்டு வெளியேறும்போதே சற்று பதற்றத்துடன் இருந்தேன். இயக்குநர் சுதா கொங்கரா என் மீது நம்பிக்கவைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்.


மதுரை வழக்கில் பேசி நடிக்க பலர் உதவி செய்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட படக்குழுவுக்கு நன்றி” என தெரிவித்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ