கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..
Actress Kushboo Net Worth : தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக இருந்த குஷ்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Actress Kushboo Net Worth : கோலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர், குஷ்பு. இவர், தற்போது அவ்வப்போது படங்களில் நடித்துக்கொண்டும் முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
டாப் நடிகையாக இருந்த குஷ்பு..
தமிழ் ரசிகர்களின் மனங்களை கொத்தாக கொய்த நாயகிகளுள் ஒருவர், குஷ்பு. இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இவர் நடிக்க வந்த காலத்தில், ‘நயாகிகள் என்றால் ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் அதை உடைத்தெறிந்து ‘பப்ளியாக பப்பாளி பழம் போல இருப்பவர்களும் நடிக்கலாம்’ என செய்து காட்டியவர், குஷ்பு. இவர் நடித்துள்ள படங்கள் ஹிட் ஆவதற்கு பாடல்களும் கதையும் ஒரு காரணமாக இருந்தாலும், இவரும் ஒரு பெரிய காரணமாக இருந்தார். இரட்டை ஜடை போட்டு, தாவணி கட்டினாலும் சரி, மாடர்ன் டிராஸ் அணைந்து முடியை அவிழ்த்து விட்டாலும் சரி, தலை நிறைய மல்லிப்பூ வைத்து புடவை கட்டினாலும் சரி குஷ்புவை அனைத்து அவதாரங்களிலும் ரசித்தனர், நம்ம ஊர் மக்கள்.
சொத்து மதிப்பு..
நடிகை குஷ்பு, திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். இதையடுத்து, சமீப காலமாகத்தான் அம்மா-அண்ணி உள்ளிட்ட ரோல்களில் நடித்து வருகிறார். பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இவர், முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க | பாஜக தேர்தல் பரப்புரையில் இருந்து ஓய்வு: நடிகை குஷ்பூ
குஷ்புவிடம் தற்போது 8.55 கிலோ தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர் 78 கிலோ வெள்ளிக்கு சொந்தக்காரர் என்றும், 4.55 கோடி அசையா சொத்துகலை வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தங்க விலை ஏற்றம் கண்டுள்ளதால், இவரது சொத்துமதிப்பு 7 கோடியாக உயர்ந்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
பங்களா வீடு-பெரிய கார்..
குஷ்புவின் வீட்டிற்கு, Avni என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இது, அவரும் அவரது கணவர் சுந்தர் சியும் இணைந்து நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயராகும். இந்த வீடும் பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்டமாக இருக்குமாம்.
குஷ்புவுக்கு 18 கோடி ரூபாய்க்கும் மேல் அசையா சொத்துகள் இருப்பதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். அது மட்டுமன்றி இவருக்கு சொந்தமாக சில விலை உயர்ந்த சொகுசு கார்களும் இருக்கின்றன. மொத்தமாக, இவரது சொத்து மதிப்பு சுமார் 25 முதல் 28 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இது, வெறும் இவரது சொத்து மதிபபு மட்டும்தான். இவரது கணவர் சுந்தர்.சியின் சொத்துகளையும் இவருடன் சேர்த்தால் எக்கச்சக்கமாக வருவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ