இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி தொடர்பான விவகாரத்தில் சர்ச்சை எழுவது வழக்கமாகி இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் நடைபெறவிருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டு அது சர்ச்சை ஆன பிறகு ஆம்பூர் பிரியாணி திருவிழா மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நடிகை நிகிலா விமல் மாட்டிறைச்சி குறித்து பேசியிருப்பது வைரலாகியுள்ளது. நடிகை நிகிலா விமல் 2009ஆம் ஆண்டு முதல் மலையாளத்தில் நடித்துவருகிறார். அவர் தமிழ் சினிமாவில் 2016ஆம் ஆண்டு வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்த் கிடார், பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.



அவர் தற்போது, ‘ஜோ ஜோ’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் இந்தப் படத்தின் விளம்பரத்துகாக தனியார் இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் நிகிலா. அந்தப் பேட்டியில் மாடுகளை வெட்டுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகியுள்ளது.


இதுகுறித்து அவர் பேசுகையில், “பசுவை வெட்டக்கூடாது என்பது தற்போது வந்திருக்கும் நடைமுறை. அது ஒரு பிரச்னை இல்லை.விலங்குகளை வெட்டக்கூடாது என்றால் எந்த விலங்கையும் வெட்டக்கூடாது.



பசுவுக்கு என்று தனித்துவமாக எதுவும் இல்லை. வெட்டலாம் என்றால் அனைத்தையும் வெட்டலாம். பசுவை மட்டும் வெட்டக்கூடாது கோழியை வெட்டலாம் என்றால் அது எந்தவகையில் நியாயம்.


மேலும் படிக்க | விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது ஏன்? பின்னணி இதுதான்


கோழி பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்தானே. பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா.அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிடக்கூடாது. 


முழுமையான சைவமாக மாற வேண்டும். நான் அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் சாப்பிடக்கூடாது என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.


மேலும் படிக்க | KGF- 2 ‘பெரியப்பா’ பற்றி டைரக்டர் ஷங்கர் சொல்வது என்ன?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!