விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது ஏன்? பின்னணி இதுதான்

விக்ரம் படத்தில் சூர்யா நடித்ததற்கான பின்னணி காரணம் இப்போது தெரியவந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2022, 11:14 AM IST
  • விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாப்பாதிரம்
  • சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழு
  • சூர்யா நடித்ததன் பின்னணி தகவல்
விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது ஏன்? பின்னணி இதுதான் title=

விக்ரம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ரஞ்சித் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரும் விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு  சர்பிரைஸ் கொடுத்தனர்.

தமிழகத்தில் படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். முதலில் மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 7 மணிக்கு மாற்றப்பட்டு பின்னர் 8 மணிக்கு டிரெய்லர் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான டிரெய்லர், ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கமலின் கர்ஜணை, பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதியின் மிரட்டல் நடிப்பு ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?

இவையனைத்தையும் விட இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்திருப்பது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அவர் இடம் பெறும் காட்சிகளும் சஸ்பென்ஸூக்கே சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக டிரெய்லரில் கடந்து போனது. ஆனால், அதனை கரெக்டாக படம் பிடித்த ரசிகர்கள், சூர்யாவின் கதாப்பாத்திரம் குறித்து தோண்டி துருவி வருகின்றனர். ஆனால், இதனை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. திரைக்கதையிலும் சூர்யாவின் என்ட்ரி மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது.

இரண்டு நாள் சூட்டிங்கில் கலந்து கொண்ட சூர்யாவின் காட்சிகள் 10 நிமிடங்கள் வரை இருக்கிறதாம். விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கூட சூர்யாவுக்கு கமல் நன்றி தெரிவித்திருந்தார். நடிக்க வருமாறு அழைப்பு கொடுத்தவுடன் சூர்யா மறு மொழி சொல்லாமல் நடித்துக் கொடுத்ததாகவும் விக்ரம் குழுவினர் கூறுகின்றனர். இவ்வளவு சிரத்தை எடுத்து ஏன் கமல் படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார்? என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் கிடைத்துள்ளது. அதில், கமலை தனது குருவாக சூர்யா கருதுகிறாராம். அதன்காரணமாக, வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் மறுமொழி கூறாமல் ஒப்புக் கொள்கிறாராம். மன்மதன் அன்பு படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார் சூர்யா. 

மேலும் படிக்க | விக்ரமிற்கு முன்பே கமல் படத்தில் நடித்துள்ள சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News