சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அவர் இப்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  ரஜினி இல்லாத காட்சியில் மேலும் சில நாட்கள் அங்கு நடைபெற உள்ளது.  இரண்டு ஹீரோக்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருக்கு வழிகாட்டும் மொய்தீன் பாய் என்ற சக்திவாய்ந்த முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழம்பெரும் நடிகை ஜீவிதா பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா ஹன்சிகா?


 


 


தற்போது 'லால் சலாம்' படத்தில் நடிக்கும் மூத்த நடிகை நிரோஷா ரஜினியின் மனைவியாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.  80களின் இளம் ஹீரோயின் நிரோஷா மறைந்த எம்.ஆர்.ராதாவின் மகளும் ராதிகா சரத்குமாரின் தங்கையுமானவர். கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் மற்றும் அவரது கணவர் ராம்கி உள்ளிட்ட அந்தக்கால முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் ரஜினியுடன் திரையை பகிர்ந்துகொள்வது இதுவே முதல்முறை, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, 'லால் சலாம்' படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் முக்கிய பகுதிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன, மேலும் அடுத்த ஷெட்யூலில் ரஜினி மற்றும் நிரோஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களையும் திரையில் பார்க்க சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  ஜெயிலர் படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், பத்ம சம்பந்தப்பட்ட அப்டேட்கள் இன்னும் வெளிவராமல் உள்ளன.  ஜூலை மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'ஜெயிலர்' படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆடம்பரமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மிகப்பெரிய பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக கொண்டு 'ஜெயிலர்' பட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 'ஜெயிலர்' படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.


மேலும் படிக்க | தமிழ் சினிமா உலகையே உலுக்கிய அதிர்ச்சி கடத்தல் சம்பவம்!


 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ