தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களுள் ஒருவர் நடிகை சமந்தா.  உடை தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தும் இவரின் உடைகள் வித்தியாசமானதாகவும், அதே சமயம் ரசிக்கும்படியும் இருப்பதால் பலரும் இவரது உடைகளில் கவனம் செலுத்துவார்கள்.  இவர் சமீபத்தில் பாட்டில் க்ரீன் நிற கவுன் அணிந்து பலரது கவனத்தையும் பெற்றார்.  இந்த கவுன் அணிந்திருந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சமந்தாவின் வொர்க்அவுட் வீடியோ வைரல்


சமந்தா அணிந்திருந்த இந்த கவுன் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் பிகினி கட் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.  அதனுடன் நூடுல் ஸ்ட்ராப் இணைக்கப்பட்டு இருந்தது,  மேலும் இந்த உடையில் எம்பிராய்டரி பேட்ச்கள், ஒரு ப்ளங்கிங் நெக்லைன், உடலமைப்பை எடுப்பாக காட்டும்படியான வடிவமைப்புடன், கணுக்கால் வரையில் இந்த கவுன் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த பிரத்யேகமான கவுனை ப்ரீதம் ஜுகல்கர் என்பவர் வடிவமைத்து இருந்தார்.


இந்த உடையுடன் அவருக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக ஹேர்ஸ்டைலும், மேக்கப்பும் அமைந்து இருந்தது.  அவர் மெஸ்ஸி ஸ்டைல் பின்னல் கொண்ட ஹேர்ஸ்டைலுடன், பளபளப்பான மேக்கப் தேர்ந்தெடுத்து இருந்தார்.  அவரது கண்களை பளிச்சென்று காண்பிக்கும் வகையில் கொஞ்சம் திக்காக ஐலைனர் போட்டிருந்தார், காதுகளில் சிறிய அளவில் டைமண்ட் ஸ்டட்டுகளை மட்டும் அணிந்துக்கொண்டு  பிற அணிகலன்களை அணியாமல் தவிர்த்துவிட்டார்.  மேலும் தனது லுக்கை நிறைவு செய்ய மெட்டாலிக் பிளாக் ஹீல்ஸ் அணிந்து இருந்தார்.  மேலும் அவர் அணிந்திருந்த இந்த கவுன் கௌரி & நைனிகா பேஷனில் இருந்து பெறப்பட்டதாகும், இதன் விலை 1,80,000 லட்சம் என்று கூறப்படுகிறது.  



சமீபத்தில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் சமந்தா இரண்டாம் இடம் வகிப்பதாக தகவல் வெளியானது.  'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதற்காக இவருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தது.  மேலும் இவர் ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்பட்டு வருகிறது.  கேரியரை பொறுத்தவரை சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காதுவாக்குல ரெண்டு படத்தில் நடித்துள்ளார், மேலும் சாகுந்தலம் படத்திலும் நடித்துள்ளார், இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.


 



மேலும் படிக்க | 12YearsOfSamantha: சமந்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR