Dream warrior Pictures என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்,  தமிழ் திரையுலகில் மாறுபட்ட  தரமான படைப்புகளை வழங்கி வருவதில் பிரபலமான நிறுவனம்.  ஜோக்கர்,  அருவி என மாறுப்பட்ட படைப்புகளை கொடுக்கும் அதே வேளியில்,  காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK (நந்த கோபன் குமரன்) என கமர்ஷியல் திரைப்படங்களையும் தயாரித்து புகழ் பெற்றுள்ளதோடு, ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது . 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO  READ | Maya Nizhal: வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மாய நிழல் ட்ரெயிலர்


அந்த வகையில் Dream warrior Picturesதயாரிப்பில்  ரொமான்டிக் ஃபேண்டஸி  திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.  இவர் முன்னதாக டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் அவர்களிடமும்,  டைரக்டர் தேசிங்குபெரியசாமி அவர்களிடமும்  இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக, பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து  இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சமந்தா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ்,  தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. 


Also Read | ரசிகர்களுக்கு திரைப்பட விருந்தாக அமையும் இந்த தீபாவளி!


Dream warrior Pictures நிறுவனத்தில் நடிகை சமந்தா நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Read Also | தெலுங்கு பிளாக் பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR