கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஊரடங்கால் அனைத்து திரையரங்கும் மூடப்பட்டன. தற்போது தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் மீண்டும் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தினால் பல திரைப்படங்கள் வெளிவராமல் முடங்கி உள்ளன. இதன் காரணமாக நிறைய படங்கள் ஓடிடியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என தனது தயாரிப்பில் உருவான படங்களை மாதம் ஒன்று என்ற வீதத்தில் ஓடிடியில் வெளியிட்டு வருகிறார் சூர்யா.
ALSO READ அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!
மிகவும் எதிர்பார்க்கபட்ட படமான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று டீசர் வெளியாக உள்ளது. சிம்புவின் நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் அண்ணாத்த திரைப்படத்துடன் மோத உள்ளது. தீபாவளி ரேஸில் யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் உருவான எனிமி திரைப்படமும் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகிறது.
பல வருடங்களுக்கு முன் அருண் விஜய்யின் நடிப்பில் உருவான வா டீல் என்ற திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் படங்கள் பார்க்க முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த தீபாவளி செம டிரீட் ஆக அமைந்துள்ளது. மேலும் ஆந்திர பிரதேசத்தில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது. தமிழகத்திலும் தீபாவளிக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
திரையரங்கை தாண்டி தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி ஒரு விருந்தாக அமைய உள்ளது. சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படம் தீபாவளி அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மேலும், டிக்கிலோனா, ஜகமே தந்திரம், சார்பட்ட பரம்பரை, கோடியில் ஒருவன் போன்ற திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளது.
ALSO READ திருடன் இல்லாத ஜாதி இருக்கா? வெளியானது சூர்யாவின் ஜெய் பீம் டீஸர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR