தெலுங்கு பிளாக் பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

2019ம் ஆண்டு வெளிவந்த ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா பட ரீமேக்கில் நடிக்கிறார் சந்தானம்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 15, 2021, 04:32 PM IST
தெலுங்கு பிளாக் பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!

காமெடியனாக நடித்து வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.  அவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.  ஒரு படம் தொடங்குவதும் தெரியாமல், முடிவதும் தெரியாமல் புயல் வேகத்தில் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் ஓடிடியில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.  இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் இணையத்தில் மீம் மெட்டீரியலாக மாறி வைரலானது.  யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ரீமேக் செய்யப்பட்ட 'பேர் வச்சாலும் வைக்காமல்' பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.  கடந்த பிப்ரவரில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படமும் திரையரங்கில் வெளிவந்து வெற்றி பெற்றது.

santhanam

தெலுங்கில் 2019ம் ஆண்டு நவீன் பாலிசெட்டி நடிப்பில் வெளிவந்த ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் ரீமேக்கில் சந்தானம் நடிப்பதாக அதிகார்வபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.  வஞ்சகர் உலகம் என்ற படத்தினை இயக்கிய மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்குகிறார்.  ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற பெயரில் தமிழில் இப்படம் தயாராகி வருகிறது.   இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டார். டிக்கிலோனா திரைப்படத்தினை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.  முழுக்க முழுக்க காமெடி படமான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தினை சந்தானத்தின் கலக்களில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ALSO READ திருடன் இல்லாத ஜாதி இருக்கா? வெளியானது சூர்யாவின் ஜெய் பீம் டீஸர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News