தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?
Samantha Malayalam Debut : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக படம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் ஒரு நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
Samantha Malayalam Debut : விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு துணை நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இவர் நாயகியாக நடித்தது மாஸ்கோவின் காவிரி படமாக இருந்தாலும், அப்படம் தாமதமாக வெளியானதால் இவரை VTV படம் மூலமே பலர் அறிந்து கொண்டனர். அதுமட்டுமின்றி அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் பெரிய ஹிட் அடித்து தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் பட வாய்ப்புகள் கூறிய ஆரம்பித்தன. கிட்டத்தட்ட 14 வருடங்களாக தென்னிந்திய திரை உலகில் இருக்கும் இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து திரையில் ஜொலித்து வருகிறார்.
காதல் திருமணமும் விவாகரத்தும்…
நடிகை சமந்தா தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரான நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனமுருக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களின் பிரிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருமணத்திற்கு முன்பு ஜாலியாக இருந்த சமந்தாவை விவாகரத்துக்கு பின்பு அப்படி பார்க்க முடியவில்லை என்று அவரது ரசிகர்கள் இப்போதும் தெரிவித்து வருகின்றனர்.
திரையிடத்திலிருந்து பிரேக்:
தொடர்ந்து ஹிட் பட நாயகியாக இருந்த சமந்தா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். சமந்தாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எந்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கை கொடுக்கவில்லை. கண்டிப்பாக இவர் பெரிதும் எதிர்பார்த்த சாகுந்தனம் திரைப்படம் மண்ணை கவ்வியது. கையில் இருந்த ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பும் பறிபோனது. பாலிவுட்டில் சிட்டெடல் தொடர் மூலம் பிரபலமாக இருந்ததை எடுத்து அத்தொடர் இன்னும் வெளியாகாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொய்வில் இருந்த சமந்தா தற்போது சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு எந்த படங்களிலும் கமிட்டாக போவதில்லை என்று கூறிவிட்டு உலகை சுற்ற தொடங்கினார், சமந்தா. தனது தோழிகளுடன் வெவ்வேறு நாடுகளுக்கு பயணித்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் கம்பக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பழைய இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருவதாகவும், அதில் ஒரு கதையை தற்போது ஓகே செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Samantha : நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா!? ரசிகர்கள் அதிர்ச்சி..
வயது மூத்த நடிகருடன் ஜோடி சேறுகிறார்:
சமந்தா இதுவரை மலையாள படம் எதிலும் நடித்ததில்லை. மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கும் மம்மூட்டியுடன் இவர் ஜோடி சேர்ந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாகவும், இதில் சமந்தா அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்துள்ள மம்முட்டி கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வகையான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மம்மூட்டிக்கு தற்போது 72 வயதாகிறது. சமந்தாவிற்க்கோ 37 வயதாகிறது. இவர்களுக்குள் இருக்கும் இந்த வயது வித்தியாசம் தற்போது இணையதளத்தின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
முன்னர் நடிக்க இருந்த நடிகை:
சமந்தா தற்போது நடிக்க இருப்பதாக சொல்லப்படும் படத்தில், முதலில் நடிக்க இருந்தவர் நயன்தாரா என கூறப்படுகிறது. ஆனால், சமீப காலமாக அவர் படங்கள் எதிலும் பெரிதாக கமிட் ஆகாமல் இருப்பதால் அவர் இந்த பட வாய்ப்பை ரிஜெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சமந்தாவிற்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ