Samantha : அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமந்தா! வைரல் புகைப்படம்..

Actress Samantha Recent Photo : நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பார்ப்பவர்களை அதிர்ச்சியில் கண் இமைக்க வைக்கும் வகையில் வேறு ஆளாக மாறியிருக்கிறார். 

Actress Samantha Recent Photo : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், சமந்தா. தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக அறிமுகான இவர், தெலுங்கில் அதே படத்தின் ரீ-மேக்கில் நாயகியாக நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா க்ரஷ்ஷாக இருக்கும் சமந்தா, தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார். இவர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிடுவதும் வழக்கம். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தென்னிந்திய திரையுலகில், திறமை மிகு நடிகையாகவும் பணக்கார நடிகையாகவும் வலம் வருபவர், சமந்தா.

2 /8

இவரது தாய்மொழி, வேறாக இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பல்லாவரம்தான். சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில்தான் பட்டப்படிப்பு பயின்றார். 

3 /8

சமந்தாவிற்கு 2010 ஆம் ஆண்டு சினிமா கதவுகள் திறந்தன. 23 வயது இளம் பெண்ணாக இருந்த சமந்தா, விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக நடித்தார். 

4 /8

அப்படம் தமிழில் ஹிட் அடிக்க, அதன் தெலுங்கு ரீ-மேக்கில் ஹீரோயின் ஆனார். இதில் அவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடித்திருந்தார். 

5 /8

காதலில் விழுந்து, எழுந்து, மீண்டும் காதலில் விழுந்த சமந்தா, நாக சைதன்யாவை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்து விட்டது. 

6 /8

மயோசிடிஸ் (Auto Immune Condition) நோய் பாதிப்பு, தொடர் தோல்வி படங்கள் என, கடந்த சில ஆண்டுகளாக சமந்தாவின் வாழ்வு கொஞ்சம் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. 

7 /8

அனைத்தில் இருந்து பிரேக் எடுக்க நினைத்த சமந்தா, 6 மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்க போவதில்லை என்று கூறிவிட்டு, வெகேஷன் சென்றார். தற்போது தனக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிட்டு, அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 

8 /8

சமந்தா, இன்று செம ஸ்டைலாக உடை அணிந்த ஒரு புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதில், அவர் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர், ஏற்கனவே வெளியில் ‘ஹாட்’ஆக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.