பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் தமிழில் ரட்சகன் படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவருக்கு 46 வயதாகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம் ரோஹ்மன் ஷால் என்பவருடன் டேட்டிங்கில் இருந்த சுஷ்மிதா சமீபத்தில் அந்த உறவை முறித்துக்கொண்டார். அவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் ஐபிஎல்லின் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருக்கிறேன். சுஷ்மிதா சென்னுடன் சென்றிருந்தேன். 



புதிய வாழ்க்கை புதிய பயணம். நிலவில் இருப்பது போல் உணர்கிறேன். இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும்” என பதிவிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் வைரலானது. 


 



இந்நிலையில் லலித் மோடியுடன் திருமணம் என்ற தகவல் குறித்து விளக்கமளித்திருக்கும் சுஷ்மிதா சென், “நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை.


திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவுவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


 



லலித் மோடி மோசடி புகாரில் சிக்கி இந்தியாவிலிருந்து தப்பி தற்போது இங்கிலாந்தில் வசித்துவருகிறார். அவர் மீதான வழக்குகள் இன்னமும் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Sushmita Sen Lalit Modi: 56 வயதில் காதலியை அறிமுகப்படுத்திய லலித்மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ