கணவன், மனைவியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அண்மையில் பிரிவதாக டிவிட்டரில் அறிவித்தனர். சினிமா துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அதிகார்வபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி அந்த அறிவிப்பில், 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.


மேலும் படிக்க | பச்சை குத்திய ரசிகருக்கு ஷாக் கொடுத்த சன்னிலியோன்.!


இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்திருந்தனர்.


இதையடுத்து தற்போது மீண்டும் இயக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கினார். இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டது. அதேபோல் நடிகர் தனுஷ் தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களின் படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருகிறார். 


இது ஒருபுறம் இருக்க, கணவரை பிரிந்த ஐஸ்வர்யா டிவிட்டரில் ஐஸ்வர்யா தனுஷ் என்றே தனது பெயரை வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது டிவிட்டரில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.



மேலும் படிக்க |  ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா – மிரட்டல் லுக்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR