Aishwarya Rajesh: “ராஜ்பவனா..ராஜ்ய சபாவா” ஆளுநர் கையால் அம்மாவுக்கு விருது-குழம்பி பதிலளித்த ஐஸ்வர்யா!
தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அம்மாவிற்கு ஆளுநர் கையால் விருது கிடைக்க உள்ளதாக கூறியுள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வேகமாக முதலிடத்திற்கு முன்னேறி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது சொப்பன சுந்தரி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே ஓரளவு வரவேற்ப்பினை பெற்றது. இதையடுத்து, இவரது ஃபர்ஹானா படமும் வெளியானது. இந்த படத்திலும் இவரது நடிப்பிற்கு பாராட்டு கிடைத்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில், தனது அம்மாவிற்கு ஆளுநர் கையில் விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவுக்கு விருது
சொப்பன சுந்தரி மற்றும் ஃபர்ஹானா படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது. அவரும், பல நேர்காணல்கலில் கலந்து கொள்வது, பல ஊடங்களுக்கு பேட்டி கொடுப்பது என பிசியாக உள்ளார். இதையடுத்து, அவர் சமீபத்தில் யூடியூப் தளத்தில் பிரபலமாக இருக்கும் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, தனது அம்மாவிற்கு இந்த அன்னையர் தினத்தில் ஆளுநர் கையால் விருது அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!
“ராஜ்ய சபாவா..? ராஜ் பவனா..?”
அந்த பேட்டியின் போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, “விருது கொடுக்க வேண்டும் என என்னை தொடர்பு கொண்டனர். நானும் எனக்குத்தான் விருதோ என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் எனது அம்மாவிற்குதான் விருது என்றார்கள். பிறகு நான் என் அம்மாவிடம் சென்று, ‘உனக்கு ஆளுநர் கையால் ராஜ்ய சபாவில் விருது அளிக்க உள்ளார்கள்’ என்று கூறினேன். அவர் எதற்கு எனக்கு விருது என்றார்” இவ்வாறாக தனது பேட்டியில் தெரிவித்திருந்தார் ஐஸ்வர்யா.
கொஞ்சம் கன்ஃபியூஷன்..
மாநிலங்களவை என அழைக்கப்படும் ராஜ்ய சபாவிற்கும், ஆளுநரின் மாளிகையான ராஜ் பவனிற்கும் வித்தியாசம் தெரியாமல் அம்மாவிற்கு விருது கிடைத்த கன்ஃபியூஷனில் ஏனாே தானோவென உளறிக்கொட்டியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது புதிதல்ல..
ஐஸ்வர்யா ராஜேஷ் இது போல இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். காக்கா முட்டை படம் வெளியான புதிதில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்தார் ஐஸ்வர்யா. அதில், தனக்கு சேரி என்றால் என்ன என்றே தெரியாது என்றும் அந்த பக்கமே இதுவரை போனதில்லை என்றும் கூறினார். அதன் பிறகு TED டாக்ஸ் எனப்படும் பிரபலமான நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தான் சேரியில்தான் வளர்ந்ததாகவும் சிறுவயதில் சாப்பாட்டிற்கே மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறினார். இப்படி, அவ்வப்போது எதையாவது பேசி மாட்டுவது, ஐஸ்வர்யாவுக்கு புதிதல்ல.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ