சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை' எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான 'எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்' எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கினர். 


மேலும் படிக்க | கமல் Vs மாரி செல்வராஜ்! அடுத்த கட்டத்துக்கு சென்ற மோதல்! முழு விவரம்!


மேலும் போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை பெரு மாநகராட்சி ஆணையரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன் போது சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் கூடுதல் ஆணையர் திரு. லோகநாதன், சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் ஆர். வி. ரம்யா பாரதி, சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திருமதி. திஷா மிட்டல், சென்னை கிழக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திரு ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் திரு. சகாதேவன், மயிலாப்பூர் காவல்துறை உதவி ஆணையர் திரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். இவர்களுடன் கல்லூரி மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக பாடல்கள் , மைம் எனப்படும் கலை வடிவம், சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் , ''இங்கு கூடியிருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் சந்தோஷமாக ‌செலவழித்து வருகிறீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்த சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை போதை பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது. மேலும் போதை பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம் 'எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்'. போதை பொருளை பயன்படுத்தாமல்.. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமையாக ஈடுபட்டு சமூக நலனை காப்போம்.'' என்றார்.



இதற்கிடையில் தற்போது நடிகர் ஜெய் நடிப்பில் உருவான தீராக்காதல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஜெய்யுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவானா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Chef Damu: சமையல் திருவிழா நடத்தும் ‘குக் வித் கோமாளி’ புகழ் செஃப் தாமு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ