நடிகர் தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர், இது திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்க போவதாக இருவரும் இணைந்து தெரிவித்து இருந்தனர்.  தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களது துறையில் தற்போது பிசியாக உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போகும் பிரபல நடிகர்?


சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மியூசிக் ஆல்பம் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை தனுஷ் தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  இந்நிலையில் இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருந்தது என்று ரசிகர்களிடம் ஐஸ்வர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.  தனது ட்விட்டர் பக்கத்தில் ,"நல்ல வேலை, ஜூம் கால்கள், சகோதரியுடன் உரையாடல்,ஸ்கிரிப்ட் வொர்க், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு(இது மிகவும் கடினமானது), எந்த நாளும் காபி இல்லாமல் தொடங்குவதில்லை, என் குழப்பமான கூந்தலைத் தவிர, இந்த வாரம் சிறப்பாக அமைந்தது.  உங்கள் வெள்ளிக்கிழமை எப்படி இருக்கிறது?" என்று பதிவிட்டுள்ளார்.


 



தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் இளையராஜாவின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டார்.   இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.  தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் ஓடிடியில்  வெளியானது. தற்போது தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களில் நடித்து வருகிறார்.  இதன் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார்.



மேலும் படிக்க | கமல்ஹாசன் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR