Rajinikanth Daughter Aishwarya Salary For Didrecting Lal Salaam Vikranth Vishnu Vishal Starrer Movie: நடிகர் ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு பிறகு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம், லால் சலாம். இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லால் சலாம் திரைப்படம்:


ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு பிறகு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம், லால் சலாம். இந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இவரது கதாப்பாத்திரம் லால் சலாம் படத்தில் 40 நிமிடங்களுக்கு வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளிவர இருந்தது. ஆனால் சில காரணங்களினால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், படம் நேற்று (பிப்ரவரி 10) வெளியானது. இதற்கு ரசிகர்கள் பாசிடிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். கிரிக்கெட் பாேட்டியில் நடைபெறும் மத அரசியலை காண்பிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். 


தந்தையை வைத்து படம் இயக்கிய ஐஸ்வர்யா..


தமிழ் திரையுலகை வெகு சில படங்களையே இயக்கியிருந்தாலும், அதன் மூலம் நிறைய பாராட்டுகளை பெற்றவர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தனது தந்தையை வைத்து முதன் முதலாக இயக்கியிருக்கும் படம், லால் சலாம். இந்த படத்தில் தனது தந்தைக்கு பவர்ஃபுல்லான ஒரு கதாப்பாத்திரத்தை கொடுத்து, அந்த கதாப்பாத்திரம் ரசிகர்களின் மனங்களில் பதியும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். இதற்காக ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். முன்னதாக இவர் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். 


மேலும் படிக்க | Lal Salaam: லால் சலாம் படத்தில் கவனிக்கத்தக்க 5 அம்சங்கள்!


ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சம்பளம்..


ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தை இயக்குவதற்கு வாங்கிய சம்பள விவரம் குறித்து சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்காக அவர், ரூ.40 முதல் 50 கோடி சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக தான் இயக்கிய படங்களுக்கு இவர், 30 கோடி வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ளது சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவலே அன்றி, அதிகாரப்பூர்வமாக எந்த பிரபலமும் இது குறித்து எங்கும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ரஜினிகாந்தின் சம்பளம்..


நடிகர் ரஜினிகாந்த், தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் 250 கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் கமிட் ஆன, ‘தலைவர் 171’ படத்திற்காக 240 முதல் 260 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. லால் சலாம் படத்தில் ரஜினியின் காட்சிகள் மொத்தம் 40 நிமிடங்களுக்கு இடம் பெற்றிருப்பதாகவும், ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என்ற வகையில், மாெத்தம் ரூ.40 கோடி ரஜினிகாந்திற்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


படம் எப்படியிருக்கு? 


லால் சலாம் படத்தை பலர் சூப்பர் ஸ்டாருக்காக பார்க்க சென்றாலும், கதை அவர்களை ஈர்த்துள்ளளதாக கருத்துகள் எழுந்துள்ளது. படத்தின் ஃபர்ஸட் ஹாஃப் கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும், ரஜினியின் இண்ட்ராேவிற்கு பிறகு சூடு பிடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. படத்தில், மதம் தொடர்பான மற்றும் மத அரசியல் தொடர்பான கருத்துகள் ஆழ பதியும் வகையில் இடம் பெற்றிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். படத்தின் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளால் படம் நன்றாக மனதில் பதிய தவறுவதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்துகளை கூறுகின்றனர். 


மேலும் படிக்க | லால் சலாம் Vs. லவ்வர்: எந்த படத்தை முதலில் பார்ப்பது? ரசிகர்களின் கருத்து இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ