உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! அவரது தந்தை குறித்து பேசி உள்ளார்!

Lal Salaam update: ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 6, 2023, 07:42 AM IST
  • ஜெய்லர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
  • லால் சலாம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
  • ரஜினி விரைவில் திரையுலகில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! அவரது தந்தை குறித்து பேசி உள்ளார்! title=

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் திரைப்படமான 'லால் சலாம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனது தந்தையும், நடிகருமான ரஜினிகாந்த் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.  தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடிக்கும் ' லால் சலாம்' படத்தில் பிஸியாக இருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, பாண்டிச்சேரி என்று நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையை இயக்குவது குறித்த உணர்ச்சிகரமான அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!

இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், இதில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் செட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தைப் பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "நான் உன்னைப் பார்க்கிறேன்.. உங்களுடன் படமெடுக்கும் ஒரு நாள் வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.. நான் உன்னைப் பாராட்டுகிறேன். நான் உன்னை வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.  2023ல் பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜீவிதா ராஜசேகரும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகையாக மீண்டும் 'லால் சலாம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shini)

அவர் இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது.  ரஜினி, ஏ. ஆர். ரகுமான் என பலரின் கூட்டணி இருப்பதால், பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்களும் வெளியாகும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் சுதந்திர தின வாரத்தையொட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   ஜூலை மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'ஜெயிலர்' படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆடம்பரமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மிகப்பெரிய பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக கொண்டு 'ஜெயிலர்' பட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  'ஜெயிலர்' படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார்.  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.  ரஜினிகாந்த் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 'ஜெயிலர்' படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை தொடங்கவிருக்கிறார்.

முன்னதாக சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக இருந்தது.  ஆனால், அதே தேதியில் ரஜினியின் ஜெயிலர் படமும் வெளியாகும் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  இதனால் வேறு வழி இல்லாமல் மாவீரன் படக்குழு தேதியை மாற்றி உள்ளது.  மாவீரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்படுகிறது, இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க,  படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News