நடிகர் அஜித், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவருகிறதாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லூரிப் பேராசிரியராக அஜித் நடிக்கும் இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில படங்களைப் போல அல்லாமல் இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இப்படம் தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதாவது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி அஜித் -61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாம். அதேபோல இப்படம் இவ்வாண்டு இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ளதாம்.


வினோத்- அஜித்- போனிகபூர் கூட்டணியில் வெளிவந்த முந்தைய படங்களுக்கு நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை எனப் பெயரிடப்பட்டிருந்தது. தற்போது உருவாகிவரும் இப்படத்துக்கு வல்லமை எனத் தலைப்பு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுவருகிறது. 


மேலும் படிக்க | 'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே!


 


அதே தலைப்பையே வைப்பார்களா அல்லது பான் -இந்தியா ரிலீஸைக் கருத்தில் கொண்டு வேறு ஏதேனும் மற்றுவார்களா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.


இப்படத்தையடுத்து நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR