'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே!

விக்ரம் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த வானதி சீனிவாசனின் ட்விட்டர் பதிவு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 5, 2022, 03:16 PM IST
  • கமல் நடித்துள்ள விக்ரம் வெளியாகி ஒரு மாதம் நிறைவு
  • விக்ரம் படத்தை வானதி சீனிவாசன் கண்டுகளித்துள்ளார்
  • படம் பார்த்த வானதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே! title=

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும்கூட பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள இப்படம் இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் அதிமாக வசூல் செய்துள்ளது. உலகளவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாஜக நிர்வாகியும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை வென்றவருமான வானதி சீனிவாசன் விக்ரம் படத்தைப் பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

வானதியின் இந்தப் பதிவு இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது. வானதி கமலைப் பாராட்டுகிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். கமல் ஒருவேளை அத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல்கூட போயிருக்கும் எனவும் அதனால்தான் வானதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஒரு தரப்பு கூறிவருகிறது. இன்னும் சிலரோ, அரசியலை விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் தொடர்ந்து நடியுங்கள் என கமலை வானதி மறைமுகமாக விமர்சித்துள்ளதாகவும்  கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | ‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் இவ்விருவரும் போட்டியிட்டிருந்தனர். இதன் வாக்கு எண்ணிக்கையில் கமல்ஹாசன்தான் வெகுநேரம் வரை முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், வானதி சீனிவாசன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News