நேர்கொண்ட பார்வை,  வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் இயக்குநர் வினோத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்ச் வாரியர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மும்முரமாக நடந்தது. சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில், நடிகர் அஜித் கலந்து கொண்டு நடித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அஜித் வெளிநாடு சென்றார். அங்கு சென்ற அவர் பைக் ரைட் குழுவினருடன் பைக் ரைட் செய்தார். அதுதொடர்பான வீடியோவும், புகைப்படமும் வெளியாகி வைரலானது. தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அஜித், சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு பல வெற்றிகளை பெற்றார். இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் சென்னையில் சில நாள்கள் நடந்தது.



இந்தச் சூழலில் அஜித் 61 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு எப்போது தொடங்குமென்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்தச் சூழலில் படத்த்ன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கவிருக்கிறது. அஜித்தும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கவிருக்கிறார். இந்த ஷெட்யூல் ஷூட்டிங்கில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவிருப்பதால் விரைவில் முழு படப்பிடிப்பையும் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் வினோத்.


மேலும் படிக்க | விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்!


முன்னதாக, அஜித் 61 படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. க்ரைம் ஜானரில் வினோத் கில்லாடி என்பதால் வலிமையில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்துவிடுவார் என அவரது ரசிகர்களும், அஜித்தின் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அஜித் இந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கான கதை வேலையும் விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தேடி வந்த வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு! நிராகரித்த சிம்பு! காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ