தேடி வந்த வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு! நிராகரித்த சிம்பு! காரணம் என்ன?

மதுபான நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் அதிக சம்பளத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் சிலம்பரசன் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 15, 2022, 10:00 AM IST
  • சிம்பு தற்போது பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
  • வெந்து தணிந்தது காடு படம் விரைவில் வெளியாக உள்ளது.
  • அதனை தொடர்ந்து சில பெரிய இயக்குனர்களுடன் இணைய உள்ளார்.
தேடி வந்த வாய்ப்பு மிகப்பெரிய வாய்ப்பு! நிராகரித்த சிம்பு! காரணம் என்ன? title=

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக சிறுவயதிலிருந்தே தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிலம்பரசன்.  சிறப்பாக நடனமாடுவது, பாடுவது, நடிப்பது என பன்முக திறமை கொண்டவர் இவர், சில காலமாக இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பு கிடைக்காமல் சில படங்கள் தோல்வியை தழுவியது.  சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த 'மாநாடு'  படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்று அவரது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் உயர்த்தியது.  இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு பிஸியான நடிகராக மாறிவிட்டார், இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் என அடுக்கடுக்காக குவிந்துகொண்டே வந்தது.  சமீபத்தில் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான 'மஹா' படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  அதனைத்தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உடன் சிம்பு 'பத்து தல' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் சிம்புவின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், மேலும் அவரது மதிப்பை உயர்த்தும் விதமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது.  பணத்திற்காக சில பிரபலங்கள் மக்களுக்கு தீங்கிழைக்கும் பொருட்களின் விளம்பர படங்களில் நடித்து வரும் நிலையில், சிம்பு அப்படி ஒரு வாய்ப்பை நிராகரித்திருக்கிறார்.

மேலும் படிக்க | பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்!

ஒரு மல்டி நேஷனல் மதுபான நிறுவனம் ஒன்று அதன் விளம்பர படத்தில் சிம்புவை நடிக்க வைக்க அணுகியது, அதற்காக பெரிய தொகையையும் அவருக்கு சம்பளமாக தருவதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து அணுகப்பட்டபொழுது அந்த வாய்ப்பை சிம்பு நிராகரித்து இருக்கிறார்.  ஆரோக்கியமற்ற சில பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு தற்போது சிம்பு தனது வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றியிருப்பது கூட இந்த வாய்ப்பை நிராகரிக்க காரணமாக இருக்கலாம் என்று சில தகவல்கள் கூறுகிறது.  சில வருடங்களுக்கு முன்னர் சிம்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்டு சிலரது கேலிக்கும் உள்ளானார், ஆனால் தற்போது பயிற்சிகள் செய்து உடலை ஃபிட் ஆக மாற்றியுள்ளார்.  இவரது இந்த உடல் மாற்றம் பலருக்கும் ஒரு உத்வேகத்தை அளித்ததோடு, பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  சமீபத்தில் ஆஹா ஓடிடி தளத்தின் விளம்பரத்தில் சிம்பு நடித்து இருந்தார்.

மேலும் படிக்க | உலகத்தரமான படத்தில் நடித்திருக்கிறேன் - விஜய் ஆண்டனி பெருமிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News