என்னை தல-னு கூப்டாதீங்க- அஜித் அறிக்கை
இனி தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் குமார் அறிவித்துள்ளார்.
H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற ரசிகர்களையும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தமிழ் படம் தான் 'வலிமை'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் (Valimai) அப்டேட்டை எதிர்பார்த்து பலரும் படக்குழுவினரை வசைபாடி வந்தனர். அதனையடுத்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதங்கத்தை சற்று அமைதிப்படுத்தியது. இதற்கிடையில் இந்த படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகிறது.
இந்த நிலையில், தற்போது அஜித் (Ajith Kumar) தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், தன்னை இனிமேல் தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
ALSO READ | வலிமை படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் இதோ
இது தொடர்பாக அஜித் குமாரின் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.,
இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் அன்புடன் அஜித்குமார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR