AK 63 பட வேலையில் இறங்கிய அஜித்! ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு என்னாச்சு?
AK 63 Shooting: நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதை தொடர்ந்து, அவர் அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அஜித்குமார், தற்போது, விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் இன்னும் முடியாத நிலையில், அதற்குள் அடுத்த படத்திற்கான பணிகளில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்:
மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம், விடாமுயற்சி. அஜித் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நடைப்பெற்று வந்தது. விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, அஜித்குமார் தனது பைக் டூரில் இருந்ததால் படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனதாக கூறப்பட்டது. ஒரு வழியாக சில ஆக்ஷன் காட்சிகளையும், படத்தின் பெரும்பான்மையான காட்சிகளையும் அஜர்பைஜானில் படம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
அஜித்குமாருடன் விடாமுயற்சி படத்தில் தமிழ் திரையுலகின் இன்னும் சில முக்கிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். நடிகர் அர்ஜூன், விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரும் அஜர்பைஜானில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இவர்களுடன் சேர்த்து, நடிகை த்ரிஷாவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர் இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பதை படக்குழு ரகிசயமாகவே வைத்துள்ளனர். நடிகை ரெஜினா கசான்ட்ராவும் இதில் இன்னொரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார். பிக்பாஸ் புகழ், ஆரவ் இதில் நடிக்கிறார். விடாமுயற்சி படத்திற்கு அனிருத், இசையமைக்கிறார்.
மேலும் படிக்க | வெளிநாட்டு ரசிகையுடன் நடனமாடும் அஜித்குமார்! வீடியோ இதோ..
அஜித் 63:
விடாமுயற்சி படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் வெளியானது. நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் அதிதீவிர ரசிகர் ஆவார். அதனால், தனது ஹீரோவிற்காக அவர் நேர்த்தியான திரைக்கதையை எழுதியிருப்பார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆதிக்-அஜித் இணையும் இந்த படத்தின் பூஜை, பொங்கல் திருநாளை முன்னிட்டு சமீபத்தில் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
20 கிலோ குறைந்த அஜித்?
நடிகர் அஜித்குமார், இளைஞராக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மாஸ் ஹீரோவாக நடித்து பழகிய அஜித், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து வெள்ளை தாடி-வெள்ளை மீசை-வெள்ளை முடியுடன்தான் கதாநாயகனாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள விஸ்வாசம், என்னை அறிந்தால், வீரம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. இவர், கடந்த 5 ஆண்டுகளில் படங்களின் கதைக்காக தன்னை குறித்த எந்த விஷயத்தையும் மாற்றாமல் நடித்து வந்தார். இதை உடைக்கும் வகையில், விடாமுயற்சி படத்திற்காக இவர் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அஜித், இப்படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘விடாமுயற்சி' படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ