Good Bad Ugly Movie Update: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அடுத்த அப்டேட் பற்றிய முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதிக ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். Good Bad Ugly திரைப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.



நடிகர் அஜித் குமார் தற்போது 'விடாமுயற்சி' என பெயரிடப்பட்ட அவரது 62ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு அஜர்பைஜனில் பல கட்டங்களாக நடைபெற்றது. இன்னும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. தெலுங்கில் பிரபல திரைப்படங்களான ரங்கஸ்தலம், புஷ்பா 1, புஷ்பா 2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த Mythiri Movie Makers இத்திரைப்படத்தையும் தயாரிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?


இதனிடையே விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த நிலையில் சென்னையில் நடிகர் அஜித்குமார் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிந்தார், அப்போது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நலம் தேறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் அவர் பைக் டூர் தொடங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.


இந்நிலையில் குட் பேட் அக்லி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளார். அதன்படி படத்தின் ஷூட்டிங்கை மே மாதம் 10ஆம் தேதியிலிருந்து தொடங்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற நடிகர், நடிகைகளின் விவரம் கூடிய விரைவில் படக்குழு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



 


மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ