மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், விடா முயற்சி. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அப்படத்தின் கலை இயக்குநர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடாமுயற்சி திரைப்படம்:


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், துணிவு படத்தை அடுத்து நடித்து வரும் படம், விடாமுயற்சி. தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமணி, இப்படத்தை டைரக்டு செய்கிறார். இதில் நடிகை த்ரிஷா, அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அஜர்பைசான் நாட்டில் நடந்து வருகிறது.


கலை இயக்குநர் மரணம்:


விடாமுயற்சி படத்தில் கலை இயக்குநராக பணி புரிந்தவர், மிலன் ஃபெர்னான்டஸ் (Milan Fernandez). இவர், அஜர்பைசானில் விடாமுயற்சி பட வேலைக்காக தங்கியிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தமிழில் வெளியான பல ஹிட் படங்களில் இவர் ஏற்கனவே கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 


மேலும் படிக்க | ஒரு வழியாக விடாமுயற்சி அப்டேட் வந்துருச்சு! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?


அஜித்தின் ஃபேவரட் கலை இயக்குநர்..


அஜித் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன், படத்தில் இருந்து தற்போது உருவாகி வரும் விடாமுயற்சி படம் வரை பல படங்களில் கலை இயக்குநராக இருந்தவர், மிலன். வேதாளம், வீரம், விவேகம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இதனால் இவர் அஜித்தின் ஃபேவரட் கலை இயக்குநர் என்று கூறப்படுகிறது. 


விஜய்யுடனும் வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் மிலன் கலை இயக்குநராக பணி புரிந்துள்ளார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் இவர் கலை இயக்குநராக பணியாற்றியிருந்தார். 


மேலும் படிக்க | ‘விடாமுயற்சி' படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ