ஒரு செய்தியை பிரபலப்படுத்த வேண்டுமென்றால் இப்பொழுதெல்லாம் சமூகவலைதளங்கள்(Social media) ஒன்றே போதுமானது. அதுவும் ட்விட்டரில் ஹேஷ்டேக் (HashTag) செய்து ஒரு செய்தியினை பதிவிட்டால் அந்த செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏன் உலகளவில் கூட ரீச் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்தளவிற்கு ட்விட்டர் (Twitter) முக்கிய பங்கு வகிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது எதற்காக குறிப்பிடுகிறோமென்றால் நடிகர் அஜீத்தின் (Ajith Kumar) வலிமை (Valimai) திரைப்படம் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இந்தாண்டு பாதியில் முதலிடம் பிடித்துள்ளதுது. அஜீத் வலிமை திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். படப்பிடிப்பும் பாதி முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப் பிடிப்புக்காக படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளது.


ALSO READ | தமிழில் அர்ச்சனை குறித்து அன்றே கணித்த தல அஜீத்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் வலிமை படத்தினை இயக்கி வறுகிறார். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து படத்தினை தயாரிக்கின்றனர். வலிமை திரைப்படத்தினை தீபாவளி அன்று ரீலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், வலிமை படத்தின் ஹேஷ்டேக் ட்விட்டரில் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்தியளவில் அதிகம் ட்விட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கில் அஜீத்தின் (Ajith) வலிமை(Valimai) திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. நடிகர் விஜய்யின் (Vijay) மாஸ்டார் (Master) திரைப்படம் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.


சமீபத்தில் தான் வலிமை திரைப்படத்தின் யுவன்சங்கர் ராஜா இசையில் "நாங்க வேற மாதிரி" பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது ட்விட்டர் ஹேஷ்டேக்கிலும் வலிமை திரைப்படம் முதலிடம் பிடித்தையொட்டி அஜீத்தின் ரசிகர்கள் "தல ரசிகர்கள் நாங்க வேற மாதிரி என்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


ALSO READ | #Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR