கனடா குடிமகன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்ஷய் குமார்
படங்கள் தோல்வியடைந்ததால் நான் கனடாவில் குடியேற திட்டமிட்டிருந்தேன் என அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.
கனேடிய குடியுரிமையை தக்கவைத்துக் கொண்டதற்காகவும், இந்தியாவில் தங்கியிருப்பதற்காகவும் அக்ஷய் குமார் அடிக்கடி இணையத்தில் விமர்சிக்கப்படுகிறார். எந்தவொரு விஷயத்துக்கு அவர் குரல் கொடுக்கும்போதெல்லாம் இந்த விஷயம் பூதாகரமாக்கப்படும். இது குறித்து நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த அக்ஷய் குமார் இப்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இந்திய குடிமகனாக இந்தியாவில் வரி செலுத்திக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | என்னது எனக்கு திருமணமா?... அம்மு அபிராமி கொடுத்த விளக்கம்
மேலும், தான் ஒரு இந்தியன் என்றும், இனியும் அவ்வாறே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். படங்கள் சரியாக வராத நேரத்தில், தான் கனேடிய குடியுரிமை பெற்றதாக தெரிவித்துள்ள அக்ஷய்குமார், கனடாவுக்குச் சென்று அங்கு வேலை செய்ய நினைதாக விளக்கம் அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரின் 15 படங்கள் தோல்வியை சந்தித்திருகின்றன. சாம்ராட் பிருத்விராஜ் முதல் பச்சன் பாண்டே வரை பல தோல்விகளை சந்தித்தார். இதனால், கனடாவில் வசிக்கும் அவரது நண்பர் ஒருவர் இந்தியாவில் வெற்றிபெற முடியாவிட்டால் அந்த நாட்டிற்குச் வருமாறு பரிந்துரைத்ததாக அக்ஷய்குமார் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் இன்னும் நிறைய பேர் இந்தியர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அக்ஷய் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
"இதற்காக கனடா சென்று குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். கனேடிய குடியுரிமை பெற்ற பிறகு, இந்தியாவில் வெற்றிகள் கிடைக்கத் தொடங்கியது. இதனால் இந்தியாவிலேயே தங்கி பணியாற்றுவது என்று முடிவு செய்தேன். அதன்பிறகு கனடா செல்வது பற்றி யோசிக்கவே இல்லை. இப்போதும், தன்னிடம் கனேடிய பாஸ்போர்ட் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வரி செலுத்திக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு இந்தியன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாட்டில் நிறைய பேர் வேறு நாட்டில் குடியுரிமை வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களை இந்தியர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | என் உள்ளத்தில் இருந்த தீதான் மருதநாயகம் வசனம் - கமல் ஹாசன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ