என்னது எனக்கு திருமணமா?... அம்மு அபிராமி கொடுத்த விளக்கம்

தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை அம்மு அபிராமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 14, 2022, 06:09 PM IST
  • அம்மு அபிராமி பல மொழி படங்களில் நடித்துவருகிறார்
  • அவருக்கு திருமணம் என தகவல் பரவியது
  • அந்தத் தகவலுக்கு அபிராமி மறுப்பு தெரிவித்துள்ளார்
என்னது எனக்கு திருமணமா?... அம்மு அபிராமி கொடுத்த விளக்கம் title=

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து 2017ஆம் ஆண்டு வெளியான படம் பைரவா. இந்தப் படத்தின் மூலம் நடிகை அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து அவர் நடித்த ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இதனால் கோலிவுட்டில் அபிராமி கவனிக்கத்தக்க நடிகையானார். தொடர்ந்து அவர் தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்துவருகின்றார். சமீபத்தில் அவர் அருண் விஜய்யுடன் யானை படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற யானை படம், Zee5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.

 

இதற்கிடையே அம்மு அபிராமிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அபிராமி. அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபிராமி,  

மேலும் படிக்க | போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் 'விருமன்' பாடல்? - கிளம்பியது புதிய சர்ச்சை!

எனது திருமணம் குறித்து நிறைய கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணம் செய்து கொள்வதைவிட முக்கியம் எனது கனவுகள்.என் வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் இருக்கின்றன. திருமணத்துக்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கும்போது நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன்" என்றார். இதன் மூலம் அம்மு அபிராமிக்கு திருமணம் என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நா. முத்துக்குமார் பெயரை சொன்னால் உள் நெஞ்சில் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News