நீண்ட நாட்களாக அதிக எதிர்பார்ப்பில் இருந்த புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு 2 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் சில காரணங்களால் மாற்றப்பட்டது. தெலுங்கு மொழியில் உருவாகி உள்ள புஷ்பா 2 படம் தமிழ், மலையாளம், கன்னடா, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இந்த அதிரடி ஆக்சன் படத்தை சுகுமார் இயக்கி உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் புஷ்பா படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் புஷ்பா 2: தி ரூல் படமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும படிக்க | அமரன் to அக்னி: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?


கூலி ஆளாக சந்தன மரம் வெட்டப் போகும் புஷ்பா எப்படி அந்த சிண்டிகேட் தலைவராக மாறுகிறார் என்பதை புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் காட்டியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக புஷ்பா 2 படம் நடக்கிறது. படத்தின் தொடக்கத்தில் தன்னுடைய சந்தன மரத்திற்கான பணம் வரவில்லை என்று ஜப்பான் வரை சென்று சண்டையிடுகிறார் கதாநாயகன் அல்லு அர்ஜுன் (புஷ்பா). அங்கிருந்து கதை தொடங்கி கிளைமாக்ஸ் முடியும் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. மொத்த படத்தையும் அல்லு அர்ஜுன் தாங்கி நிற்கிறார். அவருடைய நடிப்பும், மேனரிசமும் தான் புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ஒரு காரணமாக அமைகிறது. சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும், டயலாக் டெலிவரியிலும் புஷ்பா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் அல்லு அர்ஜுன். 



பாரஸ்ட் ரேஞ்சராக முதல் பாகத்தில் பத்து நிமிடங்களே வந்திருந்த பகத் பாசில் இரண்டாம் பாகத்தில் படம் முழுக்கவே வருகிறார். முக்கியமான வில்லன்களில் ஒருவராக வழக்கம் போல தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார் பகத் பாசில். பொதுவாக பகத் பாசில் நடிக்கும் படங்களில் அனைத்து நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு செல்வார். ஆனால் இந்த படத்தில் இவரை தாண்டி அல்லு அர்ஜுன் தான் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். தன்னுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்து கொள்ளாததற்காக அந்த முதலமைச்சரையே மாற்ற திட்டம் தீட்டுகிறார் புஷ்பா. இதனால் அவர் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார்? இறுதியில் எம்பி சித்தப்பாவை முதலமைச்சராக ஆக்கினாரா இல்லையா? என்ற ஒன்லைனை வைத்து மொத்த படமும் நகர்கிறது. 


இயக்குனர் சுகுமார் தன்னுடைய உலகத்தை உருவாக்கி அதனை ரசிக்கும் படியான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவரும் தங்களுடைய 200 சதவீத உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்துள்ளனர். ராஷ்மிகாவிற்கு முதல் பாகத்தைப் போலவே நிறைய முக்கியத்துவம் நிறைந்த காட்சிகள் இரண்டாம் பாகத்திலும் உள்ளது, அதனை சிறப்பாகவே கையாண்டு உள்ளார். பகத் பாசிலுக்கும் அல்லு அர்ஜூனுக்கும்  இடையே நடக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் கைதட்டுகளை வாங்கும்படி சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இடைவெளிக்கு முன்பு வரும் காட்சி பிரமாதம். படம் முழுக்கவே சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அவை எதுவுமே போரடிக்காமல் உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் புல்லரிக்க வைக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் நடித்துள்ள நிலையில், சாம் சிஎஸ் பின்னணி இசையும் அதிபயங்கரமாகவே இருந்தது.


ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், அஜய் மற்றும் பிரம்மாஜி போன்ற நடிகர்களின் நடிப்பு பாராட்டுக்குரியது, ஒவ்வொருவரும் அவரவர் வரம்புகளுக்குள் சிறப்பாக நடித்துள்ளனர். இரண்டாம் பாதியில் ஹீரோவின் ஆசை நிறைவேறியதில் இருந்து படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தடுமாறி உள்ளனர். ஒரு கட்டத்தில் ஒரு குடும்ப கதையாக மொத்த படமும் மாறுகிறது. 3 மணி நேரம் 20 நிமிடங்கள் படம் ஓடினாலும், முதல் 2.40 மணி நேரம் போர் அடிக்காமலே செல்கிறது. ஆனால் படம் முடியும்போது தான் சற்று ஜவ்வாக இழுத்துள்ளனர். மொத்தத்தில், புஷ்பா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓர் அளவிற்கு பூர்த்தி செய்கிறது. நிச்சயம் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு தீபாவளி தான்.


மேலும் படிக்க | புஷ்பா 2 ட்ரைலர்: தெறிக்கும் ஆக்‌ஷன் மிரட்டல்.. அல்லு அர்ஜுன் போட்ட வெடிகுண்டு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ