தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள்  முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் அமுதா வெற்றி பெற்றதாக அறிவித்து குமரேஷனுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை என நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | Modern Love Chennai: இசைஞானிக்கு குவியும் பாராட்டு..மாடர்ன் லவ் சென்னை தொடரை நம்பி பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!


அதாவது, அமுதாவை சேரில் ஜட்ஜ் அமர வைக்கிறார். அவள் கண்ணீருடன் அனைவருக்கும் நன்றி சொல்லி. அறையில் கதிரேசன் புகைப்படத்தை மாட்டுகிறாள். மேலும் நான் என்னுடைய கடமையை செய்வேன் என உறுதி மொழி எடுக்கிறாள். 


இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த அமுதா கிரைண்டர் எங்கே என கேக்க, நீ கரஸ் ஆயிட்ட உனக்கு சம்பளம் வரும் என மாணிக்கம் சொல்ல, நான் அந்த சம்பள பணத்தை தான் வாங்கப் போவதில்லை, எழைக் குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப் போவதாக சொல்கிறாள்.


அமுதா அடுத்த நாள் கரசாக பள்ளிக்கு கிளம்ப ஊர் ஆட்கள் குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லாதது பற்றி சொல்ல அமுதா அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | Rekha Birthday: “பல மலர் டீச்சர் வந்தாலும் நம்ம ஜெனிபர் டீச்சர் போல வருமா..”ரேகாவின் பிறந்தநாள் இன்று


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ