Modern Love Chennai: இசைஞானிக்கு குவியும் பாராட்டு..மாடர்ன் லவ் சென்னை தொடரை நம்பி பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Modern Love Chennai Twitter Review: 6 இயக்குநர்களின் படைப்புளாக 6 படங்கள் மாடர்ன் லவ் சென்னை என்ற பெயரில் ஆந்தாலஜி தொடராக வெளியாகியுள்ளன. இதன் ட்விட்டர் ரிவ்யூக்களை பார்ப்போமா?  

Written by - Yuvashree | Last Updated : May 18, 2023, 09:07 AM IST
  • தியாகராஜா குமாரராஜாவின் படத்திற்கு பாரட்டுகள் குவிகிறது.
  • இளையராஜாவின் இசையை ரசிகர்கல் புகழ்ந்து வருகின்றனர்.
  • சில எபிசோடுகள் ரசிகர்களின் எதிர்பார்பினை பூர்த்தி செய்ய தோற்றுள்ளது.
Modern Love Chennai: இசைஞானிக்கு குவியும் பாராட்டு..மாடர்ன் லவ் சென்னை தொடரை நம்பி பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ! title=

‘மாடர்ன் லவ்’ என்ற பெயரில் அமெரிக்க தொடராக வெளிவந்த ஆங்கில தொடர் மாபெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து, மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் என்ற பெயரிலும் இரண்டு தொடர்கள் இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப்தொடர் நேற்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

பணியாற்றிய இயக்குனர்கள்:

தியாகராஜா குமாரராஜா, பாலாஜி சக்திவேல், அஜய் சுந்தர், பாரதி ராஜா,ராஜூ முருகன்,கிருஷ்ண ராம் குமார், அஜய் சுந்தர் ஆகியோர் 6 படங்களை இயக்கியுள்ளனர். இதில் அசாக் செல்வன், ரம்யா நம்பீசன், மோனிஷா ப்ளஸ்ஸி போன்ற பலர் நடித்துள்ளனர். பாரதிராஜா இயக்கியுள்ள பறவை கூட்டில் வாழும் மான்கள் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவர்கள் சுமார் 31 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இணைந்து பணிபுரிகின்றனர். இந்த படம், நேற்று இரவு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில், இதை பார்த்த சிலர் ட்விட்டர் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 

ட்விட்டர் விமர்சனம்:

ட்விட்டர் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிடுபவர்களில் பலர், இளையராஜாவின் இசையையும் தியாகராஜா குமாரராஜாவின் படத்தையும் பயங்கரமாக பாராட்டி வருகின்றனர். அதில் சிலவற்றை பார்ப்போம். 

மேலும் படிக்க | அஜித்-ரஜினிக்கு பாடல் எழுத யார் காரணம்? பிச்சைக்காரன் 2 பாடலாசிரியர் அருண் பாரதி பளிச் பேட்டி!

“என் நண்பன் பாலு மகேந்திராவுக்கு..”

பறவை கூட்டில் வாழும் மனிதர்கள் மனிதர்கள் படத்தை இயக்குநர் பாரதிராஜா இயக்கியுள்ளார். இவர், இந்த படத்தை மறைந்த மாபெரும் இயக்குநரும் அவரது நெருங்கிய நண்பருமான  பாலுமகேந்திராவுக்கு சமர்பிப்பதாக அப்படத்தின் டைட்டில் சீனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். 

பாலுமகேந்திராவுக்கு..

“ஆள விடுங்கடா சாமி..”

மாடர்ன் லவ் சென்னை தொடரை பார்த்த ரசிகர் ஒருவர் அதன் 3,4, மற்றும் 5 ஆம் எபிசோடுகள் மொக்கையாக இருப்பதை ஒரு மீம் டெம்ப்ளேட் மூலம் தெரிவித்துள்ளார். ஜி.பி முத்து தலையில் துண்டு போட்டுக் கொண்டிருப்பது போல அவர் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

மீம்

இவர் குறிப்பிட்டுள்ள இந்த எபிசோடுகளை கிருஷ்ண ராம் குமார், அஜய் சுந்தர் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இயக்கியுள்ளனர். 

“இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்..”

தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள நினைவோ ஒரு பறவை படம், தனக்கு நடுக்கத்தை கொடுத்ததாகவும் இந்த படத்தை இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்றும் ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் இந்த படத்தை மீண்டும் பார்ப்ப்பதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் தனது மனதே இதனால் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

டைம் ட்ராவல் செய்த இளையராஜா..

மாடர்ன் லவ் தொடரில் உள்ள 3 படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் சில பாடல்கள் ஸ்பாடிஃபை தளத்தில் அதிகமாக கேட்கப்படுகின்றன. இவரது இசையை பலரும் ட்விட்டர் தளத்தில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தனது விண்டேஜ் காலத்திற்கே சென்று இளையராஜா இப்படத்திற்காக இசையமைத்துள்ளதாக ஒரு ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இளையராஜாவின் இசையில் மார்கழி படத்தில் இடம் பெற்றுள்ள ‘தென்றல்’ மற்றும் நெஞ்சில் ஒரு மின்னல்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளதாக அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 

எல்லாமே நல்லாருக்கு..

மாடர்ன் லவ் தொடரின் முதல் இரண்டு எபிசோடுகளை பார்த்த ரசிகர் ஒருவர், படத்தில் எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் மெனக்கெடல்கள் என எல்லாவற்றிற்கும் ஸ்பெஷலாக பாரட்டு தெரிவித்துள்ளார். அந்த ரசிகர். 

மேலும் படிக்க | அந்த கேரக்டரில் ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News