தமிழ் சினிமாவிற்கு டீச்சர் கதாபாத்திரத்திற்கு தொடக்கமாக இருந்தவர் ரேகா என்கிற சுமதி ஜோஸ்பைன். தற்போது அவர், தனது 53 ஆம் வயதில் அடி எடுத்து வைக்கிறார்.
பெயர் மாற்றம் செய்த ரேகா:
பாரதிராஜாவின் படங்களில் நடிக்கும் நாயகிகளுக்கு சில நாட்களிலேயே பெயர் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ரேவதி ,ராதா ,ராதிகா போன்ற நடிகைகளின் பெயர்கள் மாறியது போல சுமதி ஜோசஃபினின் பெயரும் ரேகா என மாறியது. இன்று தென்னிந்திய சினிமாக்களில் தடம் பதித்த நாயகிகளுள் ஒருவராக உள்ள இவர், கடலோரக் கவிதைகள் படம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.
நடிகை ரேகாவின் சினிமா பயணம் :
சுமார் 37 வருடங்களுக்கு முன்னாள் வெளியான கடலோரக் கவிதைகள் படத்தில் ஜெனிபர் டீச்சராக அறிமுகமானார். அப்போதெல்லாம் டீச்சர் என்றவுடன் நமக்கு குடையை வைத்துக்கொண்டு நடந்து போகும் ரேகாவின் முகம்தான் நினைவிற்கு வரும். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் சில மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்த படத்தில் ரேகாவின் நடிப்பை பார்த்து வியந்த கே.பாலச்சந்தர் தனது புன்னகை மன்னன் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் தனது கதாப்பாத்திரத்தின் தாக்கம் கடைசி வரை இருக்கும் வரையிலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்,
மாபெரும் ரசிகர் கூட்டம்:
ரேகா ஆரம்பத்திலேயே நடித்த இரண்டு படங்களும் மாபெரும் ஹிட் அடித்தது. அதனால் இவரது மார்கெட்டும் உயர்ந்தது. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் குவியத்தொடங்கியது. நடிகர்கள் கமல் மற்றும் சத்யராஜ் ஆகியோரின் படங்களால்தான் இவருக்கு இவ்வளவு மவுசு என பலர் நினைத்தனர். ஆனால், இவரது நடிப்புக்கென்று உருவாகிய கூட்டம்தான் அது என்பதை காலப்போக்கில் புரியவைத்தார் ரேகா. அதன் பிறகு, மோகன் மற்றும் ராமராஜன் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்தார் ரேகா. குறிப்பாக ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராமராஜன் மற்றும் ரேகாவிற்கு இடையேயான ஜோடி அனைவருக்கும் பிடித்து விட்டது. இதனால் இதற்கு அடுத்த ஆண்டு வெளியான ‘செண்பகமோ செண்பகமே’ என்ற படத்திலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
சின்னத்திரையில் எண்ட்ரி
தொடர்ந்து 70-80ஸ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய ரேகா சின்னத்திரையில் சில ரியாலிட்டி ஷோக்கள் மூலம் எண்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்பாளராக எண்ட்ரி கொடுத்தார். தன்னால் நன்றாக சமைக்கவும் முடியும் என்பதை நிரூபிப்பதற்காக குக் வித் கோமாளி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியின் அம்மாவாக வந்து அந்த வில்லிக்கே வில்லியாக நடித்து கலக்கினார். நடிப்பை தாண்டி, அதன் மூலம் இவருக்கு இன்னும் பல ரசிகர்கள் கூடினர்.
ரேகாவிற்கு பிடித்த படங்கள்
கேரளாவை சேர்ந்த நடிகை என்றாலும், ரேகா தமிழில்தான் நிறைய படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பல மொழிகளில் நடித்துள்ள இவர், சுமார் 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார் ரேகா. அதில் அவரிடம் “உங்களுக்கு பிடித்த படம் எது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கடலோரக் கவிதைகள் மற்றும் புன்னகை மன்னன் ஆகிய இரண்டு படங்கள்தான் என மகிழிச்சியுடன் கூறியுள்ளார்.
“ராதிகாதான் ரோல்மாடல்”
ஒரு பேட்டியின் போது நடிகை ரேகா, “சினிமாத்துறையை பொறுத்தவரையில் நடிகை ராதிகா அவர்களின் நடிப்பையும் தாண்டி அவரது குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே சினிமாவிற்கு வந்ததிலிருந்தே இன்றுவரை ரோல் மாடலாக இருந்து வருகிறார்”
ரேகாவின் தியாகம்:
‘புரியாத புதிர்’ படத்தில் நடிகர் ரகுவரன் கொதிக்க கொதிக்க ரசத்தை ரேகாவின் முகத்தில் ஊற்றுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியின் படப்பிடிப்பின் போது அவரது முகத்தில் உண்மையாகவே அடிப்பட்டு விட்டது. பிறகு மூன்று நாட்கள் வரை நடிகை ரேகா முகத்தில் காயம் ஆறாமல் இருந்துள்ளது. அந்த கதாபாத்திரத்திற்காக ரேகாவின் அர்ப்பணிப்பை பற்றி இன்றும் தமிழ் சினிமா பேசி வருகிறது.
மேலும் படிக்க | அந்த கேரக்டரில் ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ