நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல நடிகை ஆண்ட்ரியாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது பிரபல நடிகை ஆண்ட்ரியாவுக்கும் (Andrea Jeremiah) கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை பியானோ வாசிதத படி ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அறிவித்துள்ளார். அந்த வீடியோவில் “அன்பார்ந்த அனைவருக்கும், கடந்த வாரம் எனக்குக் கோவிட்-19 (Coronavirus) தொற்று உறுதியானது. என்னிடம் பேசிய, என்னைப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி. இதனால் சமூக ஊடகங்களிலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டேன்.
ALSO READ | கட்டளை மையம் திறக்க வேண்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
கொரோனா தொற்று ஒரு காரணம், இன்னொரு பக்கம் நமது நாடு மோசமான நெருக்கடியைச் சந்திக்கும் போது என்ன பதிவிட வேண்டும் என எனக்கு தெரியவில்லை
எப்போதும் போல, எனக்கு என்ன பேசுவது என்று தெரியாத தருணங்களில் நான் என் மனதார பாடுவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும். இந்த தொற்று காலம் முடிந்து நாம் மீண்டும் சந்திப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.