தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷல். அவரது வரிகள் அலங்காரமின்றி, அகங்காரமின்றி எளிமையாக இருந்ததால் பலதரப்பினரையும் சென்று சேர்ந்தன. இதனால் நா. முத்துக்குமாரை இளைஞர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசித்தனர். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் அவர் இருந்தார். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான மொழியை கொடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014ஆம் வருடங்களில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை தொடர்ச்சியாக பெற்றார். சமீபத்தில்கூட தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை பெற்றார். அதனை அவரது குழந்தைகளான ஆதவனும், மகாலட்சுமியும் பெற்றுக்கொண்டனர்.


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் முதல் குறும்படம்; அசீமுக்கு சவுக்கடி கொடுத்த கமல்


இந்தச் சூழலில் இயக்குநரும், நா. முத்துக்குமாரின் உற்ற நண்பருமான வசந்தபாலன் அநீதி என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் துஷாரா விஜயன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் ஆரம்பித்தபோது நா. முத்துக்குமாரின் கவிதைகளை தொகுத்து ஒரு பாடலாக உருவாக்கப்படுமென்று அவர் அறிவித்திருந்தார்.



பாடலை ஜிவி பிரகாஷும், யாமினியும் பாடியிருக்கிறார்கள். பக்கா மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்தப் பாடலை கேட்ட பலரும், நா. முத்துக்குமார் மீண்டும் வந்திருக்கிறார் என சிலாகித்து அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


மேலும் படிக்க | துணிவு ப்ரோமோஷனில் அஜித்?... வைரலாகும் தகவல்


மேலும் படிக்க | இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் - வாரிசு முதல் சிங்கிள் அப்டேட்


மேலும் படிக்க | ’அசல் கோலார் போகக்கூடாது’ அடம்பிடித்த நிவாஷினி - பிக்பாஸ் போட்ட கணக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ