’அசல் கோலார் போகக்கூடாது’ அடம்பிடித்த நிவாஷினி - பிக்பாஸ் போட்ட கணக்கு

பிக்பாஸ் வீட்டில் இருந்து அசல் கோலார் போகக்கூடாது என நிவாஷினி அடம்பிடித்தாலும், பிக்பாஸ் கணக்கு வேறாக இருக்கிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 30, 2022, 06:09 PM IST
’அசல் கோலார் போகக்கூடாது’ அடம்பிடித்த நிவாஷினி - பிக்பாஸ் போட்ட கணக்கு title=

பிக்பாஸ் சீசன் 6 தற்போது 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜே மகேஷ்வரி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோருடன் பாடகர் அசல் கோலாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர், பின்னர் படிப்படியாக விளையாட தொடங்கினார். இவர் ஜாலியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில்மிஷமாக விளையாட தொடங்கினார்.

மேலும் படிக்க | கேரளாவில் அதிகம் வசூல் செய்த டாப் 3 தமிழ் படங்கள்

குயின்சியிடம் அவர் காட்டிய சீண்டல் விளையாட்டுகள் எடுபடாத நிலையில், நிவாஷினியுடன் ஜோடி சேர்ந்தார். தினமும் அவருடைய ஏதாவதொரு சில்மிஷ வீடியோ வெளியாகிக் கொண்டே இருந்தது. இணையத்திலும் அவருடைய ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அசல் கோலாறின் ஆட்டம் கோளாறாக இருப்பதால், அவர் எலிமினேஷனுக்கு வர வேண்டும் என காத்திருந்தனர். நெட்டிசன்கள் எதிர்பார்த்து போலவே எலிமினேஷனில் வந்ததால், அசல் கோலாறுக்கு யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் ஆகியிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட் புரோமோ வெளியாகியிருக்கிறது.  

அதில் டேஞ்சர் ஜோனில் இடம்பெற்றுள்ள மூவரில் ஒருவராக அமர்ந்திருந்த அசல், தான் எதற்காக இங்கு உட்கார்ந்து இருக்கிறேன் என்று புரியவில்லை என கூறினார், இதை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி சிரித்தனர். பின்னர் நிவாஷினியிடம் மகேஸ்வரி, அசீம், அசல் மூவரில் யார் காப்பாற்றப்படுவார் என கமல் கேட்க, அதற்கு அவர் அசல் இருக்கணும், இருப்பாரு என சொன்னதும், கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி அசல் பெயரை அறிவித்தார். இதைக்கேட்டு நிவாஷினி கதறி அழுதுள்ளார். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி வெளியீட்டால் அதிருப்தியடைந்த ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News